← எருசலேம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
திருக்கல்லறைத் தேவாலயம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
திருக்கல்லறைத் தேவாலயம் என்றால் என்ன?
திருக்கல்லறைத் தேவாலயம் அல்லது திருக்கல்லறை பேராலயம் அல்லது கிழக்குச் சபையினால் உயிர்ப்புத் தேவாலயம் என்று அழைக்கப்படும் இது, மதிலாலான பழைய நகரின் கிறிஸ்தவப் பகுதியினுள் உள்ள ஓர் தேவாலயமாகும்.
திருக்கல்லறைத் தேவாலயம் எங்கே உள்ளது?
எருசலேம்; ஆயத்தொலைவு 31.7783, 35.2297.
இதன் கதை
திருக்கல்லறைத் தேவாலயம் அல்லது திருக்கல்லறை பேராலயம் அல்லது கிழக்குச் சபையினால் உயிர்ப்புத் தேவாலயம் என்று அழைக்கப்படும் இது, மதிலாலான பழைய நகரின் கிறிஸ்தவப் பகுதியினுள் உள்ள ஓர் தேவாலயமாகும். இப்பகுதி கொல்கொத்தா (கல்வாரி மலை) மதிப்புக்குரியதாகியது. ஏனென்றால் இங்கேதான் இயேசு சிலுவையிலறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். பல கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக நான்காம் நூற்றாண்டிலிருந்து யாத்திரிகர்களுக்கு, இயேசு இந்த இடத்தில் உயிர்த்தெழுந்த காரணத்தினால் இத்தேவாலயம் மிக முதன்மையான இடமாகும். இன்றும் இது எருசலேமின் கிரேக்க சபை தலைமைக்குருவின் தலைமைப்பீடமும், சில கிறிஸ்தவ சபைகளுக்கிடையே பங்கிடப்பட்ட கட்டடங்கள் பொறுப்பிலுள்ளது. நூற்றாண்டுகளாக மாற்றமடையாத சிக்கலான ஏற்பாடுகளும் காணப்படுகின்றது. இன்று கிழக்கு சபை, கீழ்த்திசை சபை, உரோமன் கத்தோலிக்கம் என்பனவற்றின் வீடாகவுள்ளது. அங்கிலிக்கன், ஒருமைக்கோட்பாட்டுச் சபை, புரட்டஸ்தாந்து சபை என்பனவற்றிற்கு இத்தேவாலயத்தில் நிரந்தர பிரசன்னம் இல்லை. இவர்கள் எருசலேமிலுள்ள தோட்டக் கல்லறையினை உண்மையான இயேசுவின் சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மதிற்பிக்குரிய இடமாக பேணுகின்றார்கள்.
எருசலேம்: அருகிலுள்ள இடங்கள்
கொல்கொதா
40 m தொலைவில்
Mosque of Omar
60 m தொலைவில்
யோப்பா வாயில்
280 m தொலைவில்
தாவீதின் கோபுரம்
310 m தொலைவில்
Aelia Capitolina
320 m தொலைவில்
தமஸ்கு வாயில்
380 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.