← ஏதென்ஸ்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பாரம்பரிய ஏதென்சு
பண்டைய கிரேக்க நகர அரசு
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பாரம்பரிய ஏதென்சு என்றால் என்ன?
ஏதென்சு நகரம் ( பண்டைக் கிரேக்கம்: Ἀθῆναι நவீன கிரேக்கம்: Αθήναι அதீன் அல்லது, பொதுவாக ஒருமையில், Αθήνα அதீனா) பண்டைய கிரேக்கத்தின் பாரம்பரிய காலத்தில் (கிமு 480–323) குறிப்பிடத்தக்க முக்கிய நகர அரசாக இருந்தது.
பாரம்பரிய ஏதென்சு எங்கே உள்ளது?
ஏதென்ஸ்; ஆயத்தொலைவு 37.9700, 23.7200.
இதன் கதை
ஏதென்சு நகரம் ( பண்டைக் கிரேக்கம்: Ἀθῆναι நவீன கிரேக்கம்: Αθήναι அதீன் அல்லது, பொதுவாக ஒருமையில், Αθήνα அதீனா) பண்டைய கிரேக்கத்தின் பாரம்பரிய காலத்தில் (கிமு 480–323) குறிப்பிடத்தக்க முக்கிய நகர அரசாக இருந்தது. இது கிரேக்கத்தின் அட்டிகாவில் அமைந்துள்ளது. எசுபார்த்தா மற்றும் பெலோபொன்னேசியன் கூட்டணிக்கு எதிரான பெலோபொன்னேசியன் போரில் இது டெலியன் கூட்டணியை வழிநடத்தியது. இசகோரசின் சர்வாதிகார ஆட்சியைத் தொடர்ந்து கிமு 508 இல் ஏதெனியன் சனநாயகம் கிளீசுத்தனீசுவினால் நிறுவப்பட்டது. இந்த அரசு அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் நிலையானதாக இருந்தது. ஏதெனிய சனநாயகமானது சில காலம் தடைகளுக்கு ஆளாகினாலும் கிமு 322 வரை ( லாமியன் போருக்குப் பிறகு) 180 ஆண்டுகளாக நீடித்தது. ஏதெனியன் மேலாதிக்கத்தின் உச்ச வளர்ச்சியானது கிமு 440 முதல் 430 வரை எட்டப்பட்டது. இது பெரிக்கிளீசு காலம் என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரிய காலத்தில், ஏதென்சு கலை, கல்வி, மெய்யியல் போன்றவற்றின் மையமாக இருந்தது. பிளேட்டோவின் கல்விக்கழகம் மற்றும் அரிஸ்டாட்டிலின் லைசியம் ஆகியவற்றின் அமைவிடமாக இருந்தது. ஏதென்சு சாக்கிரட்டீசு, பிளேட்டோ, பெரிக்கிளீசு, அரிஸ்டாஃபனீஸ், சாஃபக்கிளீசு மேலும் பண்டைய உலகின் பல முதன்மை மெய்யியலாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் பிறப்பிடமாகவும் இருந்தது.
ஏதென்ஸ்: அருகிலுள்ள இடங்கள்
பினெக்ஸ்
190 m தொலைவில்
Philopappos Monument
300 m தொலைவில்
Odeon of Herodes Atticus
400 m தொலைவில்
அரயோப்பாகு மேடை
400 m தொலைவில்
Temple of Athena Nike
460 m தொலைவில்
Athena Promachos
540 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.