Landmark Wiki

← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

எல்லோரா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

எல்லோரா என்றால் என்ன?

எல்லோரா ([1] இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தொல்லியற் களமாகும்.

எல்லோரா எங்கே உள்ளது?

இந்தியா; ஆயத்தொலைவு 20.0268, 75.1771.

இதன் கதை

எல்லோரா ([1] இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தொல்லியற் களமாகும். இது சம்பாஜி நகரிலிருந்து வடமேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ராஷ்டிரகூட மரபினரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இக்களம் புகழ் பெற்ற குடைவரைகளைக் கொண்டு விளங்குகிறது. எல்லோரா ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும். எல்லோரா இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையின் முன்னோடி ஆக விளங்குகிறது. சரணந்திரிக் குன்றுகளின் நிலைக்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள 34 குகைகள் இங்கே உள்ளன. இக் குகைகளிலே பௌத்த, இந்து மற்றும் சமணக் கோயில்களும், துறவு மடங்களும் அமைந்துள்ளன. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை. 12 பௌத்த குகைகள் (குகைகள் 1-12), 17 இந்துக் குகைகள் (குகைகள் 13-29) மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளதானது அக்காலத்தில் நிலவிய சமயப் பொறையை எடுத்துக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது. இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டச் சின்னமாகும் .

இந்தியா: அருகிலுள்ள இடங்கள்

அஜந்தா குகைகள்

80.0 km தொலைவில்

Maratha Military Landscapes of India

150.2 km தொலைவில்

Kas Plateau Reserved Forest

293.4 km தொலைவில்

சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா

321.9 km தொலைவில்

பீம்பேட்கா பாறை வாழிடங்கள்

410.3 km தொலைவில்

Historic City of Ahmadabad

427.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.