← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா
குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español
விரைவான பதில்கள்
சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா என்றால் என்ன?
சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா (Champaner-Pavagadh Archaeological Park) குஜராத் மாநிலம் பஞ்சமகால் மாவட்டத்தில் அமைந்த வரலாற்றுப் புதையலாகும்.
சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா எங்கே உள்ளது?
இந்தியா; ஆயத்தொலைவு 22.4833, 73.5333.
இதன் கதை
சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா (Champaner-Pavagadh Archaeological Park) குஜராத் மாநிலம் பஞ்சமகால் மாவட்டத்தில் அமைந்த வரலாற்றுப் புதையலாகும். சுமார் 800 மீட்டர் உயரம் கொண்ட பாவாகேத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சாம்பானேர்- பாவாகேத் என்றழைக்கப்படுகிறது. இங்கு மலை உச்சியில் உள்ள காளிகா மாதா கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மலை அடிவாரத்தில் உள்ள அரண்மனைக் கட்டிடங்கள், பள்ளிவாசல்கள் போன்றவை 8 ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவையாகும். 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில், இந்து-முஸ்லிம் கலாச்சாரத்திற்கும் இஸ்லாமியக் கட்டிடக்கலைக்கும் இடையே ஏற்பட்ட மாற்றம் இந்தப் பூங்காவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பெரும்பாலும் மாற்றமின்றி இருந்துவரும் ஆரம்பகால இஸ்லாமிய மற்றும் முகலாயப் பேரரசுக்கு முந்தைய நகரமும் இதில் அடங்கும்.
இந்தியா: அருகிலுள்ள இடங்கள்
Historic City of Ahmadabad
114.2 km தொலைவில்
Maratha Military Landscapes of India
200.3 km தொலைவில்
இராணியின் படிக்கிணறு, குஜராத்
211.7 km தொலைவில்
இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்
289.9 km தொலைவில்
அஜந்தா குகைகள்
310.3 km தொலைவில்
எல்லோரா
321.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.