Landmark Wiki

← அமிருதசரசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பொற்கோயில்

சீக்கியர்களின் புனிதத் தலம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பொற்கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பொற்கோயில் என்றால் என்ன?

ஹர்மந்திர் சாஹிப் (Harmandir Sahib, பஞ்சாபி: ਹਰਿਮੰਦਰ ਸਾਹਿਬ) அல்லது தர்பார் சாஹிப் (பஞ்சாபி: ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும்.

பொற்கோயில் எங்கே உள்ளது?

அமிருதசரசு; ஆயத்தொலைவு 31.6200, 74.8764.

இதன் கதை

ஹர்மந்திர் சாஹிப் (Harmandir Sahib, பஞ்சாபி: ਹਰਿਮੰਦਰ ਸਾਹਿਬ) அல்லது தர்பார் சாஹிப் (பஞ்சாபி: ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும். இதனை பொதுவாக பொற்கோயில் (Golden Temple) என அழைப்பர். சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்துவார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது. 1604 ஆம் ஆண்டில், குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாகிப் எனும் ஆதி கிரந்தத்தை முடித்து இந்த குருத்வாராவில் அதை நிறுவினார். ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப், இங்கு வைக்கப்பட்டுள்ளது . இந்த புனித கோயில், ஜாதி மத பேதமின்றி அணைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும். ஹர்மந்திர் சாஹிப்ற்குள் நுழைய நான்கு கதவுகள் உள்ளன. இது அனைத்து மக்கள் மற்றும் சமயங்களின் மீதான சீக்கியர்களின் வெளிப்படைத்தன்மையை பறைசாற்றும் சின்னமாக உள்ளது.இன்றைய நிலையில் உள்ள குருத்வாரா, ஜஸ்ஸா சிங் அலுவாலியாவினால் மற்ற சீக்கிய படையணி உதவியுடன் 1764 இல் மீண்டும் கட்டப்பட்டது.

அமிருதசரசு: அருகிலுள்ள இடங்கள்

அகால் தக்த்

120 m தொலைவில்

Ramgarhia Bunga

130 m தொலைவில்

Gurdwara Baba Atal

320 m தொலைவில்

ஜலியான்வாலா பாக்

400 m தொலைவில்

பிரிவினை அருங்காட்சியகம்

680 m தொலைவில்

கோபிந்த்கர் கோட்டை

1.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.