Landmark Wiki

← Cairns: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பெருந் தடுப்புப் பவளத்திட்டு

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பெருந் தடுப்புப் பவளத்திட்டு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பெருந் தடுப்புப் பவளத்திட்டு என்றால் என்ன?

பெரும் தடுப்புப் பவளத்திட்டு (The Great Barrier Reef) உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் திட்டுத் தொகுதியாகும்.

பெருந் தடுப்புப் பவளத்திட்டு எங்கே உள்ளது?

Cairns; ஆயத்தொலைவு -16.4000, 145.8000.

இதன் கதை

பெரும் தடுப்புப் பவளத்திட்டு (The Great Barrier Reef) உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் திட்டுத் தொகுதியாகும். 2,900 தனித் திட்டுக்களையும், 2,600 கி.மீ. தூரம் நீண்டிருக்கும் 900 தீவுகளையும்கொண்டு ஏறத்தாழ 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இப்பவளத்திட்டு பரந்து விரிந்துள்ளது. இப்பவளத்திட்டு வடகிழக்கு ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து கரைக்கு அப்பால் பவளக் கடலில் (Coral Sea) அமைந்துள்ளது. ஆத்திரேலியாவின் வடகீழ் கரையோரத்திற்கு அப்பால் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள பெருந்தடுப்புபவளப் பாறையானது, புவியில் வாழும் அங்கிப்பிரிவொன்றால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மிக எளிமையான கட்டமைப்பை உடைய பவளப்பாறைகள் விலங்குகளால் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இது 33,000 பவளப்பாறைகளையும் 300 பவளப் பாறை தீவுகளையும் கொண்டுள்ளது. இந்தப் பவளப்பாறை ஒரு சிக்கலான அமைப்பு முறையிலேயே உருவாகியுள்ளது. பெரும் தடுப்புப் பவளத்திட்டு, உயிரினங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஒற்றை அமைப்பாகும். இதனை விண்வெளியில் இருந்து காணமுடியும். இந்தப் பவளத்திட்டு அமைப்பு பல கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்தப் பவளத்திட்டு அமைப்பு பல கோடிக்கணக்கான பவள விழுதுகள் எனப்படும் நுண்ணிய உயிரினங்களால் ஆக்கப்பட்டுள்ளன .

Cairns: அருகிலுள்ள இடங்கள்

Cairns Tropical Zoo

42.4 km தொலைவில்

Kuranda National Park

46.5 km தொலைவில்

Daintree Rainforest

48.1 km தொலைவில்

Rainforestation Nature Park

49.7 km தொலைவில்

ஆத்திரேலிய வண்ணத்துப்பூச்சி சரணாலயம்

50.0 km தொலைவில்

Skyrail Rainforest Cableway

51.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.