← செய்ப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஜெய்கர் கோட்டை
பிற மொழிகள்: English · 中文 · Español
விரைவான பதில்கள்
ஜெய்கர் கோட்டை என்றால் என்ன?
ஜெய்கர் கோட்டை மற்றும் அரண்மனை (Jaigarh Fort) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத் தலைநகரம் செய்ப்பூர் நகரத்தின் அமேர் பகுதியில், ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது.
ஜெய்கர் கோட்டை எங்கே உள்ளது?
செய்ப்பூர்; ஆயத்தொலைவு 26.9859, 75.8507.
இதன் கதை
ஜெய்கர் கோட்டை மற்றும் அரண்மனை (Jaigarh Fort) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத் தலைநகரம் செய்ப்பூர் நகரத்தின் அமேர் பகுதியில், ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இராசபுத்திர குலத்தவரான மன்னர் இரண்டாம் சவாய் ஜெய்சிங் என்பவர் தனது போர் வெற்றியை கொண்டாடும் நோக்கில் ஜெய்கர் கோட்டை மற்றும் அரண்மனையை, 1726ல் கட்டத்துவங்கினார். ஆம்பர் கோட்டையின் வடிவத்தில் கட்டப்பட்ட ஜெய்கர் கோட்டையை வெற்றிக் கோட்டை என்றும் அழைப்பர். இக்கோட்டை, வடக்கு - தெற்கில் 3 கிலோ மீட்டர் நீளமும், கிழக்கு - மேற்கில் 1 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. கோட்டையின் சுவர்களை எதிரிகள் இடிக்க முடியாத அளவிற்கு உறுதி கொண்டது. இக்கோட்டையின் மேல் உள்ள பீரங்கி, உலகின் பெரிய பீரங்கிகளில் ஒன்றாகும். ஜெய்கர் அரண்மனை வளாகத்தில் லெட்சுமி விலாஸ், லலிதா கோயில், விலாஸ் கோயில் மற்றும் ஆரம் கோயில், ஆயுத சாலை மற்றும் அருங்காட்சியகம் உள்ளது. ஆம்பர் கோட்டையும், ஜெய்கர் கோட்டையும், பூமிக்கடியில் உள்ள சுரங்கப்பாதை இணைக்கிறது.
செய்ப்பூர்: அருகிலுள்ள இடங்கள்
ஆம்பர் கோட்டை
0 m தொலைவில்
Shila Devi
110 m தொலைவில்
Maota Lake
340 m தொலைவில்
Jagat Shiromani Temple, Amer
600 m தொலைவில்
ஜல் மகால்
3.6 km தொலைவில்
Garh Ganesh Temple
5.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.