Landmark Wiki

← செய்ப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஜல் மகால்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ஜல் மகால்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஜல் மகால் என்றால் என்ன?

ஜல் மகால் அல்லது நீர் அரண்மனை , இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான செய்ப்பூர் நகரத்தின் மன் சாகர் ஏரியின் நடுவில் அமைந்த அழகிய அரண்மனை ஆகும்.

ஜல் மகால் எங்கே உள்ளது?

செய்ப்பூர்; ஆயத்தொலைவு 26.9537, 75.8463.

இதன் கதை

ஜல் மகால் அல்லது நீர் அரண்மனை , இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான செய்ப்பூர் நகரத்தின் மன் சாகர் ஏரியின் நடுவில் அமைந்த அழகிய அரண்மனை ஆகும். ஜல் மகாலை ஜெய்பூர் இராச்சிய மன்னர் இரண்டாம் ஜெய்சிங் 18ம் நூற்றாண்டில் நிறுவினார். ஜெய்ப்பூர் - தில்லி நெடுஞ்சாலையில், ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் ஜல் மகால் உள்ளது. 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட மன் சாகர் ஏரியில் அமைந்த நீர் அரண்மனை, இராசபுத்திர - முகலாயக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. ஐந்து அடுக்குகள் கொண்ட ஜல் அரன்மனை சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டது. 300 ஏக்கர் பரப்பளவும், அதிக பட்சமாக 15 அடி ஆழம் கொண்ட ஏரியில் நீர் முமுமையாக நிரம்பும் போது, ஜல் மகாலின் முதல் நான்கு அடுக்குகள் நீரில் மூழ்கிவிடும். ஐந்தாம் அடுக்கு மட்டும் வெளியே காட்சியளிக்கும். ஏரியில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரியின் நீர் மாசடைந்தும், நீரடைப்புகளால் ஏரிக்கு வரும் நீரும் குறைந்து விட்டது. தற்போது இராஜஸ்தான் அரசு ஏரியை சுத்தப்படுத்தி வருகிறது. ஜெய்ப்பூரின் வடகிழக்கில் அமைந்த ஆரவல்லி மலைத்தொடர்களின் அடிவாரத்தின், 23.5 சகி.மீ. பரப்பு கொண்ட நிலப்பரப்பே, ஜல் மகால் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியாகும். ஜல் அரண்மனையின் மேற்கூரையின் நான்கு முனைகளில் உள்ள அரை - எண்கோண வடிவ விதானங்கள் நேர்த்தியாக, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

செய்ப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Garh Ganesh Temple

2.0 km தொலைவில்

Maota Lake

3.4 km தொலைவில்

கோவிந்த தேவ் ஜி கோயில்

3.5 km தொலைவில்

நாகர்கர் கோட்டை

3.6 km தொலைவில்

ஆம்பர் கோட்டை

3.6 km தொலைவில்

ஜெய்கர் கோட்டை

3.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.