← இந்தோனேசியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
லோரென்ட்சு தேசிய பூங்கா
இந்தோனேசிய தேசிய பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
லோரென்ட்சு தேசிய பூங்கா என்றால் என்ன?
லோரென்ட்சு தேசிய பூங்கா இந்தோனேசியாவின் பப்புவாவில் அமைந்துள்ளது, இது முன்னர் ஐரியன் ஜயா (மேற்கு நியூ கினி ) என்று அழைக்கப்பட்டது.
லோரென்ட்சு தேசிய பூங்கா எங்கே உள்ளது?
இந்தோனேசியா; ஆயத்தொலைவு -4.7500, 137.8333.
இதன் கதை
லோரென்ட்சு தேசிய பூங்கா இந்தோனேசியாவின் பப்புவாவில் அமைந்துள்ளது, இது முன்னர் ஐரியன் ஜயா (மேற்கு நியூ கினி ) என்று அழைக்கப்பட்டது. 25,056 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (9,674 சதுர மைல்) அமைந்துள்ள இது தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தேசிய பூங்காவாகும். 1999 ஆம் ஆண்டில் லோரென்ட்சை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்தது. நியூ கினியானது பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். லோரென்ட்சு உலகிலேயே மிகவும் சுற்றுச்சூழல் ரீதியாக வேறுபட்ட தேசிய பூங்காக்களில் ஒன்றாகும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கடல் பகுதிகள், சதுப்பு நிலங்கள், ஓதம் மற்றும் நன்னீர் சதுப்பு காடு, தாழ்நிலம் மற்றும் மான்ட்டேன் மழைக்காடுகள், அல்பைன் துாந்திரம் மற்றும் பூமத்திய ரேகை பனியாறுகள் ஆகிய வகைப்பாடுகளைக் கொண்ட முழுமையான சூழல் மண்டலங்களைக் கொண்ட ஒரே இயற்கை அமைவிடம் இதுவாகும். 4884 மீட்டர் உயரத்தில், புன்காக் ஜெயா (முன்னதாக கார்ஸ்டென்ஸ் பிரமிடு) மலையானது இமயமலைக்கும் ஆண்டிஸுக்கும் இடையிலான மிக உயரமான மலைத்தொடராகும். சர்வதேச பறவை வாழ்க்கை அமைப்பானது லோரென்ட்ஸ் பூங்காவை "நியூ கினியின் மிக முக்கியமான உயிர்க்கோளக் காப்பகம்" என்று அழைத்தது.
இந்தோனேசியா: அருகிலுள்ள இடங்கள்
சஙீரான்
2999.7 km தொலைவில்
Ujung Kulon National Park
3601.8 km தொலைவில்
சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடுகள் பாரம்பரியக் களம்
4039.2 km தொலைவில்
Sawahlunto
4139.1 km தொலைவில்
Ombilin Coal Mine
4140.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.