Landmark Wiki

← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தேசிய நவீன கலைக்கூடம், பெங்களூர்

பிற மொழிகள்: English

தேசிய நவீன கலைக்கூடம், பெங்களூர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தேசிய நவீன கலைக்கூடம், பெங்களூர் என்றால் என்ன?

தேசிய நவீன கலைக்கூடம் (National Gallery of Modern Art) இந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் அமைந்துள்ள ஒரு கலைக்கூடம் ஆகும்.

தேசிய நவீன கலைக்கூடம், பெங்களூர் எங்கே உள்ளது?

பெங்களூர்; ஆயத்தொலைவு 12.9897, 77.5881.

இதன் கதை

தேசிய நவீன கலைக்கூடம் (National Gallery of Modern Art) இந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் அமைந்துள்ள ஒரு கலைக்கூடம் ஆகும். இந்த கலைக்கூடம் 2009 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இக் கலைக்கூடத்தில் நவீன இந்திய கலைப் பொருள்கள் மற்றும் ராஜா ரவி வர்மா, ஜாமினி ராய், அமிர்தா ஷெர்-கில், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏராளமான நவீன மற்றும் தற்கால கலைஞர்களின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு ஆடிட்டோரியம், ஒரு குறிப்பு நூலகம், ஒரு சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட பல வசதிகள் இந்த அருங்காட்சியகத்தில் காணப்படுகின்றன. இந்த தேசிய நவீனக் கலைக்கூடமானது பெங்களூருவில் கலை நடவடிக்கைகளின் முக்கியமான மையமாகவும் பெங்களூருவில் ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாகவும் மாறி வரும் வகையில் அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற பேச்சாளர்களைக் கொண்டு, கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. திரைப்படங்கள் திரையிடப் படுகின்றன. பட்டறைகள் நடத்தப் படுகின்றன. மேலும் பல வழிகாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து இந்த கலைக்கூடம் மேற்கொண்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்

Lok Bhavan, Bengaluru

900 m தொலைவில்

Gandhi Bhavan, Bengaluru

920 m தொலைவில்

பெங்களூர் அரண்மனை

1.1 km தொலைவில்

விதான சௌதா

1.2 km தொலைவில்

பெங்களூர் சுதந்திரப் பூங்கா

1.5 km தொலைவில்

கப்பன் பூங்கா

1.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.