← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கப்பன் பூங்கா
பிற மொழிகள்: English · Español
விரைவான பதில்கள்
கப்பன் பூங்கா என்றால் என்ன?
சிறீ சாமராசேந்திர பூங்கா என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் கப்பன் பார்க் (Cubbon Park) என்பது பெங்களூரு நகரத்தின் முக்கிய அடையாளமான அதன் 'நுரையீரல்' பகுதியாக மத்திய நிர்வாக பகுதியில், (12.
கப்பன் பூங்கா எங்கே உள்ளது?
பெங்களூர்; ஆயத்தொலைவு 12.9750, 77.5933.
இதன் கதை
சிறீ சாமராசேந்திர பூங்கா என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் கப்பன் பார்க் (Cubbon Park) என்பது பெங்களூரு நகரத்தின் முக்கிய அடையாளமான அதன் 'நுரையீரல்' பகுதியாக மத்திய நிர்வாக பகுதியில், (12.977931° வடக்கிலும், 77.595143° கிழக்கிலும்) அமைந்துள்ளது. இப்பூங்கா முதலில் 1870 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ரிச்சர்ட் சாங்கி என்பவர் மைசூர் மாநிலத்தின் அப்போதைய பிரிட்டிசு தலைமை பொறியாளராக இருந்தபோது, இது 100 ஏக்கர் (0.40 கி.மீ. 2) பரப்பளவைக் கொண்டிருந்தது. பின்னர் விரிவாக்கம் நிகழ்ந்துள்ளது. இப்போது உள்ள பகுதி சுமார் 300 ஏக்கர் (1.2 கி.மீ. 2) என்பதாகும். இப்பூங்கா ஏராளமான தாவரங்களின், விலங்கினங்களின் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அதனுடன் ஏராளமான சுவாரஸ்யமும் மிக்க, அழகும் மிக்க கட்டிடங்களும் பிரபலமான நபர்களின் சிலைகளும் உள்ளன. 1870 ஆம் ஆண்டில் மைசூரின் செயல் ஆணையரான சர் ஜான் மீட் என்பவரின் பெயரால் இந்த பொது பூங்கா முதன்முதலில் மீட்ஸ் பூங்கா என்று பெயரிடப்பட்டது. பின்னர் அந்தக் காலத்தின் மிக நீண்ட காலம் ஆணையாராக இருந்த சர் மார்க் கப்பனுக்குப் பிறகு கப்பன் பூங்கா என்று பெயர் மாற்றப்பட்டது.
பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்
அரசு அருங்காட்சியகம், பெங்களூரு
270 m தொலைவில்
வெங்கடப்பா கலைக்கூடம்
320 m தொலைவில்
விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்
330 m தொலைவில்
விதான சௌதா
590 m தொலைவில்
பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை
590 m தொலைவில்
Lok Bhavan, Bengaluru
840 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.