← வாசிங்டன், டி. சி.: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கலைகளுக்கான பெண்களின் தேசிய அருங்காட்சியகம்
அமெரிக்கத் தலைநகரமான வாசிங்டனில் அமைந்துள்ள அருங்காட்சியம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கலைகளுக்கான பெண்களின் தேசிய அருங்காட்சியகம் என்றால் என்ன?
கலைகளுக்கான பெண்களின் தேசிய அருங்காட்சியகம் (National Museum of Women in the Arts) என்பது ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமான வாசிங்டன், டி.
கலைகளுக்கான பெண்களின் தேசிய அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
வாசிங்டன், டி. சி.; ஆயத்தொலைவு 38.9001, -77.0293.
இதன் கதை
கலைகளுக்கான பெண்களின் தேசிய அருங்காட்சியகம் (National Museum of Women in the Arts) என்பது ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமான வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள ஓர் தேசிய அருங்காட்சியகம் ஆகும். கலைகள் மூலம் பெண்களை வெற்றிபெற அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் அருங்காட்சியகமாகும். 1981 ஆம் ஆண்டில் வாலஸ் மற்றும் வில்ஹெல்மினா ஹால்டே ஆகியோரால் தொடங்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டதிலிருந்து, இந்த அருங்காட்சியகம் 16 ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை 1,000 க்கும் மேற்பட்ட கலைஞர்களின் 6,000 க்கும் மேற்பட்ட படைப்புகளின் தொகுப்பைப் பெற்றுள்ளது. இந்த தொகுப்பில் மேரி கசாட், அல்மா வூட்ஸி தாமஸ், எலிசபெத் லூயிஸ் விஜி-லெப்ரன் மற்றும் ஆமி ஷெரால்ட் ஆகியோரின் படைப்புகளும் அடங்கும். மெக்சிகோ நாட்டு பெண் ஓவியர் பிரிடா காலோ வரைந்த போல்ஷெவிக் புரட்சியாளரும் மார்க்சிசக் கொள்கையாளருமான லியோன் திரொட்ஸ்கியின் ஓவியத்தை இங்கு காணலாம். இந்த அருங்காட்சியகம் பழைய மேசனிக் கோயிலை ஆக்கிரமித்துள்ளது. இது அமெரிக்காவின் வரலாற்று இடங்களின் தேசியப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிக்காக 2021 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இப்பணிக்காக 66 மில்லியன் டாலர் செலவிடப்பட்டு அக்டோபர் 21,2023 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.
வாசிங்டன், டி. சி.: அருகிலுள்ள இடங்கள்
Ford's Theatre
480 m தொலைவில்
Smithsonian American Art Museum
580 m தொலைவில்
National Portrait Gallery (United States)
590 m தொலைவில்
வெள்ளை மாளிகை
660 m தொலைவில்
National Museum of American History
1000 m தொலைவில்
இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம்
1.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.