Landmark Wiki

← சிரம்பான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மலாயா புதுக்கிராமங்கள்

மலாயா அவசரகாலத்தின் போது உருவாக்கப்பட்ட ஒரு குடியேற்றத் திட்டம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu

மலாயா புதுக்கிராமங்கள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மலாயா புதுக்கிராமங்கள் என்றால் என்ன?

புதுக்கிராமங்கள் அல்லது மலாயா புதுக்கிராமங்கள் (மலாய்: Kampung Baru; ஆங்கிலம்: New Villages அல்லது Chinese New Villages; சீனம்: 华人新村) என்பது பிரித்தானிய மலாயாவில்; மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது உருவாக்கப்பட்ட ஒரு குடியேற்றத் திட்டமாகும்.

மலாயா புதுக்கிராமங்கள் எங்கே உள்ளது?

சிரம்பான்; ஆயத்தொலைவு 2.6667, 101.7667.

இதன் கதை

புதுக்கிராமங்கள் அல்லது மலாயா புதுக்கிராமங்கள் (மலாய்: Kampung Baru; ஆங்கிலம்: New Villages அல்லது Chinese New Villages; சீனம்: 华人新村) என்பது பிரித்தானிய மலாயாவில்; மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது உருவாக்கப்பட்ட ஒரு குடியேற்றத் திட்டமாகும். இவற்றைத் தடுப்பு முகாம்கள் (Internment Camps) என்று அழைப்பதும் உண்டு. 1950-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் திட்டத்தின் (Briggs Plan) ஒரு பகுதியாக இந்த முகாம்கள் உருவாக்கப்பட்டன. கிராமப்புறக் குடிமக்களுக்குள் மறைந்து இருந்த மலாயா தேசிய விடுதலை படையினரின் (Malayan National Liberation Army) ஆதரவாளர்களைத் தனிமைப்படுத்த இந்தப் புதுக்கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பெரும்பாலான புதுக்கிராமங்கள், முள்கம்பிகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களால் சூழப்பட்டு இருந்தன. தடுப்பு முகாம்களில் இருந்து தப்பிச் செல்பவர்களையும்; ஊரடங்குச் சட்டத்திற்குக் கட்டுப்படாமல் வெளியேற முயற்சிக்கும் எவரையும் சுட்டுக் கொல்லவும் கட்டளையிடப்பட்டது. பிரித்தானியர்கள் மலாயாவை விட்டு வெளியேறிய பின்னர், பல புதுக்கிராமங்கள்; சாதாரண குடியிருப்பு நகரங்களாகவும் மற்றும் சில புதுக்கிராமங்கள் சாதாரண கிராமங்களாகவும் மாற்றம் கண்டன.

சிரம்பான்: அருகிலுள்ள இடங்கள்

Sri Sendayan Mosque

8.8 km தொலைவில்

Sultan Abdul Samad Mosque

9.0 km தொலைவில்

Lukut Fort and Museum

12.7 km தொலைவில்

போர்டிக்சன்

17.1 km தொலைவில்

Seremban Jamek Mosque

20.4 km தொலைவில்

சிரம்பான்

20.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.