← பாரிசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
நோட்ரே டேம் டி பாரிஸ்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
நோட்ரே டேம் டி பாரிஸ் என்றால் என்ன?
நோட்ரே டேம் டி பாரிஸ் (Notre Dame de Paris அல்லது பாரிஸ் அன்னை) என்பது ஒரு கோதிக் பேராலயம்.
நோட்ரே டேம் டி பாரிஸ் எங்கே உள்ளது?
பாரிசு; ஆயத்தொலைவு 48.8531, 2.3500.
இதன் கதை
நோட்ரே டேம் டி பாரிஸ் (Notre Dame de Paris அல்லது பாரிஸ் அன்னை) என்பது ஒரு கோதிக் பேராலயம். மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான பாரிசில் உள்ளது. இதுவே பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமும், பேராயரின் இல்லமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு கோதிக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகப் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான வயலே லெ டுச் என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. நோட்ரே டேம் என்பது பிரெஞ்சு மொழியில் எம் அரசி என்னும் பொருள் கொண்டது, இவ்வழக்கு பொதுவாக தமிழ் மரபில் எம் அன்னை எனக்கொள்ளப்படுகின்றது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் கட்டுமான வேலைகள் கோதிக் காலம் முழுவதிலும் நடைபெற்றது.கி. பி. 1163 ஆம் ஆண்டில் இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
பாரிசு: அருகிலுள்ள இடங்கள்
Lutetia
260 m தொலைவில்
புனிதத் திருமனை
440 m தொலைவில்
Pont Neuf
780 m தொலைவில்
Panthéon
830 m தொலைவில்
Centre Pompidou
860 m தொலைவில்
பாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம்
860 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.