← சிரியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பல்மைரா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பல்மைரா என்றால் என்ன?
பல்மைரா (Palmyra, , அரபி: تدمر; எபிரேயம்: תַּדְמוֹר; பண்டைக் கிரேக்கம்: Παλμύρα), சிரியா நாட்டில் ஓம்சு ஆளுநரகப் பகுதியில் அமைந்துள்ள தொன்மையான செமித்திய நகரமாகும்.
பல்மைரா எங்கே உள்ளது?
சிரியா; ஆயத்தொலைவு 34.5514, 38.2681.
இதன் கதை
பல்மைரா (Palmyra, , அரபி: تدمر; எபிரேயம்: תַּדְמוֹר; பண்டைக் கிரேக்கம்: Παλμύρα), சிரியா நாட்டில் ஓம்சு ஆளுநரகப் பகுதியில் அமைந்துள்ள தொன்மையான செமித்திய நகரமாகும். திமிஷ்குவிற்கு வடகிழக்கே 215 கிலோமீட்டர்கள் (134 மைல்கள்) தொலைவிலும் புராத்து ஆற்றின் தென்மேற்கே 180 km (110 mi) தொலைவிலும் அமைந்துள்ள இது ஓர் பாலைவனச்சோலை ஆகும். புதிய கற்காலத்தில் கி.மு இரண்டாவது ஆயிரவாண்டுகளிலேயே பல்மைரா சிரியாவின் பாலைவனத்தில் பயணிக்கும் பயணிகள் ஓய்வெடுக்கும் ஊராக விவரிக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியத்தில் இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அசிரிய மன்னர்கள் ஆண்ட இந்நகரம் செலுக்கட் பேரரசின் கீழும் பின்னர் உரோமைப் பேரரசு கீழும் பெரும் செழிப்புடன் விளங்கியது. 1929ஆம் ஆண்டிலிருந்து இது பயனற்றுப் போனது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் 1980ஆம் ஆண்டில் இக்களத்தை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. இதன் பெயர் செமித்திய மொழியில் தட்மூர் (அரபி: تدمر) ஆகும். அரமேயத்தில், இதன் பொருள் "வெல்ல முடியாத நகரம்" என்பதாகும். இப்பெயருடனான பபிலோனிய கற்றூண்கள் சிரியாவின் மாரி பகுதியில் கிடைத்துள்ளன. இன்றும் அராபிய மொழியில் இது தட்மூர் என்றே அழைக்கப்படுகின்றது.
சிரியா: அருகிலுள்ள இடங்கள்
பண்டைய அலெப்போ நகரம்
209.2 km தொலைவில்
பண்டைய தமாசுக்கசு நகரம்
214.6 km தொலைவில்
Dead Cities
236.5 km தொலைவில்
Ancient City of Bosra
280.2 km தொலைவில்
Bosra
280.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.