Landmark Wiki

← உரோம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பந்தியன், ரோம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பந்தியன், ரோம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பந்தியன், ரோம் என்றால் என்ன?

பந்தியன் என்பது, இத்தாலியின் ரோம்நகரில் உள்ள முன்னைய ரோமக் கோயிலும் தற்போதைய கிறித்தவத் தேவாலயமும் ஆகும்.

பந்தியன், ரோம் எங்கே உள்ளது?

உரோம்; ஆயத்தொலைவு 41.8986, 12.4768.

இதன் கதை

பந்தியன் என்பது, இத்தாலியின் ரோம்நகரில் உள்ள முன்னைய ரோமக் கோயிலும் தற்போதைய கிறித்தவத் தேவாலயமும் ஆகும். இது, அகசுத்தசின் ஆட்சிக் காலத்தில் (கிமு 27 – கிபி 14) மார்க்கசு அக்ரிப்பாவினால் கட்டுவிக்கப்பட்ட கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது. தற்போதைய கட்டிடத்தை கிபி 126 ஆண்டை அண்டி பேரரசன் ஆட்ரியன் (Hadrian) கட்டிமுடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆட்ரியன் புதிய கட்டிடத்தைக் கட்டியபோது அக்ரிப்பாவின் முன்னைய கல்வெட்டை அப்படியே விட்டுவைத்ததால், பழைய கட்டிடம் தீயால் அழிந்த பின்னர் புதிய கட்டிடத்தைக் கட்டிய காலம் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டதுடன், புதிய கட்டிடத்தின் காலம் எது என்பதையும் துல்லியமாக அறிய முடியவில்லை. பந்தியன் வட்டமான தள வடிவம் கொண்டது. முகப்பில், கூரையின் முக்கோணத் தலைக்கட்டுப் பகுதியைத் தாங்கி நிற்கும் கருங்கல்லாலான பெரிய கொறிந்தியத் தூண்களைக் கொண்ட முக மண்டபம் காணப்படுகின்றது. செவ்வக வடிவான இடைகழி ஒன்று முக மண்டபத்தையும் வட்ட மண்டபத்தையும் இணைக்கின்றது. வட்ட மண்டபம் ஒரு குவிமாடக் கூரையைக் கொண்டுள்ளது. இக்குவிமாடக் கூரையின் நடுவில் ஒரு வட்ட வடிவமான துளை உள்ளது. இதனால், இப்பகுதியில் வட்ட மண்டபம் ஆகாயத்துக்குத் திறந்துள்ளது. இக்கட்டிடம் கட்டி ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிய போதும், இன்றும் இதன் குவிமாடமே உலகின் மிகப்பெரிய வலுவூட்டப்படாத காங்கிறீட்டுக் குவிமாடம் ஆகும்.

உரோம்: அருகிலுள்ள இடங்கள்

மினெர்வா மேல் புனித மரியா கோவில்

140 m தொலைவில்

Piazza Navona

310 m தொலைவில்

Fontana dei Quattro Fiumi

310 m தொலைவில்

Column of Marcus Aurelius

360 m தொலைவில்

இயேசு கோவில்

390 m தொலைவில்

Campo de' Fiori

510 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.