Landmark Wiki

← உரோம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இயேசு கோவில்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

இயேசு கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இயேசு கோவில் என்றால் என்ன?

இயேசு கோவில் (Church of the Gesù) என்பது உரோமை நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டிடங்களுள் முக்கியமான ஒன்றாகவும், இயேசு சபையின் மையக் கோவிலாகவும் விளங்குகிறது.

இயேசு கோவில் எங்கே உள்ளது?

உரோம்; ஆயத்தொலைவு 41.8958, 12.4797.

இதன் கதை

இயேசு கோவில் (Church of the Gesù) என்பது உரோமை நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டிடங்களுள் முக்கியமான ஒன்றாகவும், இயேசு சபையின் மையக் கோவிலாகவும் விளங்குகிறது. இக்கோவிலுக்கு "அர்ஜெந்தீனா பகுதியில் அமைந்த இயேசுவின் திருப்பெயர்க் கோவில்" (இத்தாலியம்:Chiesa del Santissimo Nome di Gesù all'Argentina) என்னும் நீண்ட பெயரும் உண்டு. இக்கோவிலின் முகப்பு "பரோக்கு" கலைப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இப்பாணியில் பல கோவில்கள் உலகெங்கும் கட்டப்பட்டன. குறிப்பாக, இயேசு சபைத் துறவியர் தாம் கிறித்தவ மறையைப் பரப்பச் சென்ற நாடுகளில் இக்கலைப் பாணியில் கோவில்கள் கட்டியெழுப்பினர். இயேசு சபையின் நிறுவுநரான புனித லொயோலா இஞ்ஞாசியார் இக்கோவிலைக் கட்டுவதற்கான கருத்தை 1551ஆம் ஆண்டு முன்வைத்தார். புரடஸ்தாந்து சீர்திருத்தத்தின் போதும் அதைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையில் நிகழ்ந்த சீர்திருத்தத்தின் போதும் இக்கோவில் செயல்பாட்டு மையமாயிருந்தது. மேலும், இயேசு சபை 1773இல் முடக்கப்பட்ட ஆண்டு வரை இக்கோவில் இயேசு சபைத் தலைமையிடமாகவும் திகழ்ந்தது.

உரோம்: அருகிலுள்ள இடங்கள்

Piazza Venezia

240 m தொலைவில்

மினெர்வா மேல் புனித மரியா கோவில்

270 m தொலைவில்

Victor Emmanuel II Monument

310 m தொலைவில்

திராயானின் தூண்

370 m தொலைவில்

பந்தியன், ரோம்

390 m தொலைவில்

Capitoline Hill

390 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.