Landmark Wiki

← உரோம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மினெர்வா மேல் புனித மரியா கோவில்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

மினெர்வா மேல் புனித மரியா கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மினெர்வா மேல் புனித மரியா கோவில் என்றால் என்ன?

மினெர்வா மேல் புனித மரியா கோவில் (Basilica of Saint Mary Above Minerva) என்பது உரோமை நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டு இடங்களுள் முக்கியமான ஒன்று ஆகும்.

மினெர்வா மேல் புனித மரியா கோவில் எங்கே உள்ளது?

உரோம்; ஆயத்தொலைவு 41.8981, 12.4783.

இதன் கதை

மினெர்வா மேல் புனித மரியா கோவில் (Basilica of Saint Mary Above Minerva) என்பது உரோமை நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டு இடங்களுள் முக்கியமான ஒன்று ஆகும். இது புனித சாமிநாதர் சபையினரின் முதன்மைக் கோவில்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இலத்தீன் மொழியில் இக்கோவில் Basilica Sanctae Mariae supra Minervam என்றும் இத்தாலிய மொழியில் Basilica di Santa Maria sopra Minerva என்றும் அழைக்கப்படுகிறது. இது இளம் பெருங்கோவில் (minor basilica) என்னும் நிலையைச் சார்ந்ததாகும். பண்டைய உரோமை நகரில் மார்சிய நிலத்தில் அமைந்த மினெர்வா கோவிலின் மீது இக்கோவில் எழுந்ததால் இப்பெயர் உண்டாயிற்று. இக்கோவிலின் சிறப்புக்குக் கீழ்வருவனவும் காரணங்களாகும்: இக்கோவிலில் சீயெனா நகர் புனித காதரின் என்பவரின் கல்லறை உள்ளது. புகழ்பெற்ற சாமிநாதர் சபைத் துறவியும் ஓவியருமான ஃப்ரா அஞ்சேலிக்கோ (முத்திப்பேறுபெற்ற ஃபியேசொலே நகர் யோவான்) என்பவரின் கல்லறையும் இக்கோவிலில் உள்ளது. பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று நவீன வானியலின் தந்தை எனப் போற்றப்பெறும் கலிலேயோ கலிலேயி கூறியது தவறான கொள்கையாகும் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்ட இடம் இக்கோவிலை அடுத்துள்ள துறவியர் இல்லம் ஆகும். பின்னர் கலிலேயோ 1633ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் நாள் தாம் கற்பித்தது தவறு என்று கூறி, தம் கொள்கையைப் பின்வாங்கிக் கொண்டது இக்கோவிலில்தான்.

உரோம்: அருகிலுள்ள இடங்கள்

பந்தியன், ரோம்

140 m தொலைவில்

இயேசு கோவில்

270 m தொலைவில்

Column of Marcus Aurelius

330 m தொலைவில்

Piazza Venezia

390 m தொலைவில்

Piazza Navona

450 m தொலைவில்

Fontana dei Quattro Fiumi

450 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.