Landmark Wiki

← ஒட்டாவா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

நாடாளுமன்றக் குன்று

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Español

நாடாளுமன்றக் குன்று
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

நாடாளுமன்றக் குன்று என்றால் என்ன?

நாடாளுமன்றக் குன்று (Parliament Hill, பிரான்சியம்: Colline du Parlement), பொதுவழக்கில் தி ஹில், ஒன்ராறியோ மாகாணத்தின் ஒட்டாவாவில் நகரமையத்தில் ஒட்டாவா ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள அரசு நிலப்பகுதி ஆகும்.

நாடாளுமன்றக் குன்று எங்கே உள்ளது?

ஒட்டாவா; ஆயத்தொலைவு 45.4247, -75.6994.

இதன் கதை

நாடாளுமன்றக் குன்று (Parliament Hill, பிரான்சியம்: Colline du Parlement), பொதுவழக்கில் தி ஹில், ஒன்ராறியோ மாகாணத்தின் ஒட்டாவாவில் நகரமையத்தில் ஒட்டாவா ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள அரசு நிலப்பகுதி ஆகும். இதன் கோதிக் மறுமலர்ச்சிப் பாணிக் கட்டிடங்களில் கனடிய நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இங்கு பல முக்கியமானத் தேசியக் குறியீடுகளை கட்டிட வடிவமைப்பில் காணலாம். இதனைச் சுற்றிப் பார்க்க ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 3 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர். 18ஆவது, 19ஆவது நூற்றாண்டுகளில் இந்நிலப்பகுதி படைத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1859இல் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா கனடா மாகாணத்தின் தலைநகரமாக பைடவுனை அறிவித்த பிறகு இதனை அரசு நிலமாக மேம்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் பல விரிவாக்கங்களையும் துறைசார் கட்டிடங்களையும் 1916இல் தீவிபத்தில் அழிபட்ட மைய வளாகத்தையும் அடுத்து நாடாளுமன்றக் குன்று தற்போதுள்ள வடிவைக் கொண்டுள்ளது; 1927இல் அமைதிக் கோபுரம் கட்டப்பட்டது. 2002 முதல் விரிவான $1 பில்லியன் செலவுள்ள புதுப்பித்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; இது 2020 வரை தொடரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத் தொகுதியில் மூன்று வளாகங்கள் உள்ளன: மேற்கு வளாகம், கிழக்கு வளாகம் மற்றும் மைய வளாகம்.

ஒட்டாவா: அருகிலுள்ள இடங்கள்

Peace Tower

20 m தொலைவில்

Library of Parliament

110 m தொலைவில்

Rideau Canal

210 m தொலைவில்

Confederation Square

320 m தொலைவில்

தேசிய போர் நினைவகம்

320 m தொலைவில்

Valiants Memorial

330 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.