← இலங்கை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பொலன்னறுவை
இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நகரம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பொலன்னறுவை என்றால் என்ன?
பொலன்னறுவை இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு நகரமாகும்.
பொலன்னறுவை எங்கே உள்ளது?
இலங்கை; ஆயத்தொலைவு 7.9333, 81.0000.
இதன் கதை
பொலன்னறுவை இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு நகரமாகும். தற்பொழுது இது பொலன்னறுவை மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.பி 10 நூற்றாண்டு தொடக்கம் கி.பி 13 நூற்றாண்டு வரை பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். அனுராதபுரத்திற்கு பாதுகாப்பு வழங்குமொரு அரணாகவிருந்த இந்நகரை, சோழர் இலங்கையின் தலைநகராக தெரிவுசெய்தனர். பின்னர் இந்நகரம் சிங்கள மன்னர் காலத்திலும் இலங்கையின் தலைநகரமாக விளங்கியது. இந்த நகரைச் சுற்றி, பல அழகிய பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. பராக்கிரமபாகு மன்னரால் கட்டப்பட்டவை குறிப்பிடத்தக்கனவாகும். இவை பொலன்னறுவையில் வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் உணவுத் தேவைக்காகவும், சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்காகவும் பயன்பட்டன. சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக இங்கே பல பாரிய பௌத்த விகாரைகளும் , இந்து கோவில்களும் இருக்கின்றன. கைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக்கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், தொல்பொருளாய்வாளர்களினால் வெளிக்கொணரப்பட்டது.
இலங்கை: அருகிலுள்ள இடங்கள்
சிகிரியா
26.6 km தொலைவில்
தம்புள்ளை பொற்கோவில்
39.6 km தொலைவில்
இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள்
58.1 km தொலைவில்
அனுராதபுரம்
78.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.