Landmark Wiki

← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

செங்கோட்டை

தில்லியில் உள்ள வரலாற்றுக் கோட்டை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

செங்கோட்டை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

செங்கோட்டை என்றால் என்ன?

செங்கோட்டை (இந்தி: लाल क़िला, உருது: لال قلعہ) என்பது இந்தியாவின் பழைய டெல்லியில் உள்ள ஒரு வரலாற்று கோட்டையாகும்.

செங்கோட்டை எங்கே உள்ளது?

தில்லி; ஆயத்தொலைவு 28.6558, 77.2408.

இதன் கதை

செங்கோட்டை (இந்தி: लाल क़िला, உருது: لال قلعہ) என்பது இந்தியாவின் பழைய டெல்லியில் உள்ள ஒரு வரலாற்று கோட்டையாகும்.இது இந்தியாவின் தலைநகரமான தில்லியில் அமைந்துள்ளது. ஷாஜகானின் ஆட்சியின் கீழ் முகலாய கட்டிடக்கலையின் உச்சத்தை இந்தக் கோட்டை பிரதிபலிக்கிறது, மேலும் பாரசீக அரண்மனைக் கட்டிடக்கலையை இந்திய மரபுகளுடன் இணைக்கிறது. இது 2007-ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது. 1739-இல் நாதிர்ஷா முகலாயப் பேரரசின் மீது படையெடுத்தபோது கோட்டையின் கலைப்படைப்புகள் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 1857-இல் இந்தியக் கிளர்ச்சியைத் தொடர்ந்து கோட்டையின் பெரும்பாலான பளிங்கு கட்டமைப்புகள் ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்டன. கோட்டையின் தற்காப்புச் சுவர்கள் பெரிய அளவில் சேதமடையாமல் இருந்தன. பின்னர் இக்கோட்டை ஆங்கிலேயர்களின் படைத்துருப்புகளுக்கான இடமாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த 15 ஆகஸ்ட் 1947 அன்று, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இக்கோட்டையின் லாகோரி கேட் மீது இந்தியக் கொடியை ஏற்றினார்.அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று, கோட்டையின் முதன்மை வாயிலில் நாட்டின் பிரதமர் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றி, தேசிய அளவில் ஒளிபரப்பு உரையை ஆற்றுவார்.

தில்லி: அருகிலுள்ள இடங்கள்

Moti Masjid (Red Fort)

250 m தொலைவில்

ஜாமா பள்ளி, தில்லி

920 m தொலைவில்

பழைய தில்லி

1.2 km தொலைவில்

காஷ்மீர் நுழைவாயில், தில்லி

1.7 km தொலைவில்

பதேபூரி பள்ளிவாசல்

1.8 km தொலைவில்

ராஜ்காட்

1.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.