Landmark Wiki

← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம் என்றால் என்ன?

சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம் என்ற 156 வயது கொண்ட வெப்பமண்டல தோட்டமானது சிங்கப்பூரின் வணிக மையப் பகுதியின் அண்மையில் அமைந்துள்ளது.

சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம் எங்கே உள்ளது?

சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.3151, 103.8162.

இதன் கதை

சிங்கப்பூர் தாவரவியல் தோட்டம் என்ற 156 வயது கொண்ட வெப்பமண்டல தோட்டமானது சிங்கப்பூரின் வணிக மையப் பகுதியின் அண்மையில் அமைந்துள்ளது. இது யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அங்கீகரிக்கப்பட்ட மூன்று தோட்டங்களுள், ஒரே வெப்பமண்டல தோட்டமாகும். 2013லிருந்து இந்த தோட்டம் "டிரிப்அட்வைசர் நிறுவனத்தினரால் ஆசியாவின் சிறந்த தோட்டமாகவும், சுற்றுலா ஈர்ப்பாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இது 2012-ல் சர்வதேச தோட்ட சுற்றுலா விருதுகள் நிகழ்வின்பொழுது, ஆண்டின் தொடக்க தோட்டமாக அறிவிக்கப்பட்டது மற்றும் 2008 ல் மிச்செலின் மூன்று நட்சத்திர தரவரிசையைப் பெற்றது. 1859-இல் இந்த தாவரவியல் தோட்டம் அதன் தற்போதைய இருப்பிடத்தில், ஒரு விவசாய தோட்டக்கலை சங்கம் மூலம் நிறுவப்பட்டது. இதன் முதல் அறிவியல் இயக்குநர் ஹென்றி நிக்கோலஸ் ரிட்லி தலைமையில், ரப்பர் தாவரத்தின் சாகுபடி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இப்பிராந்தியத்தின் ரப்பர் வர்த்தகம் ஏற்றமடைய முக்கியப் பங்கு வகித்தது. இன்றும் பயன்படுத்தப்படுமளவுக்கு ரப்பர் பிரித்தெடுத்தல் தொழில்நுட்பத்தினை கச்சிதமாக மேம்படுத்தி, அப்பகுதியிலுள்ள தோட்டக்காரர்களின் பொருளாதார மதிப்பை வளர்க்கும் விதத்தில் ரப்பர் உற்பத்தி வேகமாக விரிவடைந்தது.

சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

The Istana

3.1 km தொலைவில்

Sri Temasek

3.2 km தொலைவில்

MacRitchie Reservoir

3.6 km தொலைவில்

லிட்டில் இந்தியா, சிங்கப்பூர்

4.1 km தொலைவில்

Fort Canning Hill

4.1 km தொலைவில்

சிங்கப்பூரின் தேசிய அருங்காட்சியகம்

4.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.