Landmark Wiki

← காலி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சிங்கராஜக் காடு

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

சிங்கராஜக் காடு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சிங்கராஜக் காடு என்றால் என்ன?

சிங்கராஜா வனம் (Sinharaja Forest Reserve) இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும்.

சிங்கராஜக் காடு எங்கே உள்ளது?

காலி; ஆயத்தொலைவு 6.4167, 80.5000.

இதன் கதை

சிங்கராஜா வனம் (Sinharaja Forest Reserve) இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். இது இலங்கையின் சபரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி , மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் தொடக்கம் 1170 மீட்டர் உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும். இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் உலக உரிமைத்தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளிடையே மிகப் பிரபலமான தளங்களில் ஒன்றாகும். இன்றைய சிங்கராஜா வனத்தின் பெரும்பகுதி 1875 ஆண்டு மே 8 ஆம் நாள், இலங்கைத் தரிசு நிலச்சட்டத்தின் கீழ் 4046 ஆம் இலக்க அரசிதழின் படி சிங்கராஜா வனம் இயற்கை ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேலும் பல பகுதிகள் இதற்குள் இணைக்கப்பட்டன. ஏப்ரல் 1978 ஆம் ஆண்டு இது உயிரின ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 1988 அக்டோபர் 21 ஆம் நாள் 528/14 அரசிதழின் படி, 7,648.2 எக்டயார் பரப்பளவு இலங்கையின் தேசிய உரிமைக் காடாக இது அறிவிக்கப்பட்டது. இதே ஆண்டு யுனெஸ்கோ 6,092 எக்டயார் காட்டு ஒதுக்கீடு மற்றும் 2,772 எக்டயார் முன்மொழியப்பட்ட காட்டு ஒதுக்கீடு என்பவற்றை உள்ளடக்கிய 8,864 எக்டயார் பரப்பளவை உலக உரிமைத் தளமாக அறிவித்தது.

காலி: அருகிலுள்ள இடங்கள்

Wakwella Bridge

48.6 km தொலைவில்

Island Hermitage

52.7 km தொலைவில்

புனித மரியாள் பேராலயம், காலி

52.9 km தொலைவில்

காலி தேசிய நூதனசாலை

53.3 km தொலைவில்

காலி தேசிய சமுத்திர நூதனசாலை

53.3 km தொலைவில்

Groote Kerk

53.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.