← கொல்கத்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மாநில தொல்லியல் அருங்காட்சியகம்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவிலுள்ள அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
மாநில தொல்லியல் அருங்காட்சியகம் என்றால் என்ன?
மாநில தொல்லியல் அருங்காட்சியகம் (State Archaeological Museum) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தைக் குறிக்கும்.
மாநில தொல்லியல் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
கொல்கத்தா; ஆயத்தொலைவு 22.4994, 88.3180.
இதன் கதை
மாநில தொல்லியல் அருங்காட்சியகம் (State Archaeological Museum) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தைக் குறிக்கும். இது 1962 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமாகும். சுசுனியா (பாங்குரா மற்றும் பிற தளங்கள்) ஆரம்ப, மத்திய மற்றும் பிற்பகுதி கற்காலத்தின் அரிய கருவிகள், பாண்டு ராசர் திபியிலிருந்து (பர்த்வான்) கிடைத்த சுடுமண் சிற்பங்கள், சிற்பங்கள், குப்தா, மௌரியா, சுங்கா, குசானா, பாலா மற்றும் இடைக்கால காலங்களிலிருந்து கல் மற்றும் சுவர் பூச்சுகள் ஆகியவை இங்குள்ளன. டயமண்டு ஆர்பர் சாலையில் உள்ள பெகாலா பசார் மெட்ரோ மற்றும் சித்தேசுவரி காளி கோயிலுக்குப் பின்னால் பெகாலாவில் உள்ள நஃபர் சந்திர தாசு சாலை அருகே அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 1963 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட 'வரலாற்றுக் கலை' பற்றிய ஒரு பகுதியும் இங்கு உள்ளது. இதில் ஏராளமான பழைய சுடுமட்பாண்டங்கள், வெண்கலங்கள், மரச் சிற்பங்கள், நெசவு மற்றும் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. பல அட்டைகள் மற்றும் பிற வெளியீடுகள் இங்கு விற்கப்படுகின்றன. அருங்காட்சியகச் செயல்பாடுகளில் வரலாற்று தளங்களின் ஆய்வுகள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் போன்றவை அடங்கும். தற்போதைய அரண்மனை கட்டடம் ராய் பகதூர் அம்பிகா சரண் ராய் குடும்பத்தின் இரண்டாவது மகன் சத்யேந்திரநாத் ராய் குடும்பத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது.
கொல்கத்தா: அருகிலுள்ள இடங்கள்
இந்திய அரசு காசாலை, கொல்கத்தா
1.8 km தொலைவில்
Kalighat Home for the Dying
3.4 km தொலைவில்
காளிகாட் காளி கோயில்
3.4 km தொலைவில்
ஆலிப்பூரா சிறை
3.6 km தொலைவில்
விலங்கியல் தோட்டம், அலிபூர்
4.3 km தொலைவில்
நேதாஜி பவன்
5.5 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.