Landmark Wiki

← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அக்சரதாம்

கோவில்கள்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

அக்சரதாம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அக்சரதாம் என்றால் என்ன?

அக்சர்தாம் (குசராத்தி: દિલ્હી અક્ષરધામ, தேவநாகரி: दिल्ली अक्षरधाम) இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் கௌதம புத்தா நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான நொய்டாவில் உள்ள ஓர் இந்துக் கோயில் வளாகமாகும்.

அக்சரதாம் எங்கே உள்ளது?

தில்லி; ஆயத்தொலைவு 28.6125, 77.2772.

இதன் கதை

அக்சர்தாம் (குசராத்தி: દિલ્હી અક્ષરધામ, தேவநாகரி: दिल्ली अक्षरधाम) இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் கௌதம புத்தா நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான நொய்டாவில் உள்ள ஓர் இந்துக் கோயில் வளாகமாகும். இது தில்லி அக்சர்தாம் அல்லது சுவாமி நாராயணன் அக்சர்தாம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது புது தில்லியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. புது தில்லி இரயில் நிலையத்திலிருந்து அக்சர்தாம் செல்ல மெட்ரோ இரயில் வசதி உள்ளது. இவ்வளாகமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமுடைய இந்திய பண்பாட்டையும் இந்து பண்பாட்டையும் கட்டடக்கலையையும் ஆன்மீகத்தையும் வெளிப்படுத்துகிறது. இக்கட்டடத்துக்கு போச்சாசன்வாசி ஸ்ரீ அக்சர் புருசோத்தம் சுவாமிநாராயணன் சன்சுதாவின் மதத் தலைவர் பிரமுக் சுவாமி மகாராஜ் உயிர்ப்பூட்டியவராவார். இவரின் 3,000 தொண்டர்களும் 7,000 கைவினைத்தொழிலாளர்களும் அக்சர்தாம் கட்ட உதவினார்கள். தில்லிக்கு வருகைதரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளிலும் கிட்டத்தட்ட 70 சதவீதமானவர்களைக் கவருகின்ற இக்கோயில், 6 நவம்பர் 2005 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. 2010 இல் காமன்வெல்த்து விளையாட்டிற்காக முன்மொழியப்பட்ட கிராமத்திற்கு அருகே யமுனா ஆற்றங்கரையில் இது அமைந்துள்ளது. வளாகத்தின் மையத்திலுள்ள நினைவுச்சின்னம் வாஸ்து சாத்திரத்தையும் பஞ்சாட்சர சாத்திரத்தையும் சார்ந்து கட்டப்பட்டது.

தில்லி: அருகிலுள்ள இடங்கள்

புராணா கிலா

3.2 km தொலைவில்

உமாயூனின் சமாதி

3.4 km தொலைவில்

பாரத் மண்டபம்

3.5 km தொலைவில்

ராஜ்காட்

4.1 km தொலைவில்

நிஜாமுதீன் தர்கா

4.2 km தொலைவில்

தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி

4.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.