← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி
புதுதில்லியில் உள்ள கலை அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி என்றால் என்ன?
தேசிய நவீன கலைக்கூடம் (National Gallery of Modern Art) என்பது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள பிரதான கலைக்கூடமாகும்.
தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி எங்கே உள்ளது?
தில்லி; ஆயத்தொலைவு 28.6102, 77.2344.
இதன் கதை
தேசிய நவீன கலைக்கூடம் (National Gallery of Modern Art) என்பது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள பிரதான கலைக்கூடமாகும். இந்த பிரதான அருங்காட்சியகம் புது தில்லியில் உள்ள ஜெய்ப்பூர் மாளிகையில் அமைந்துள்ளது. இது மார்ச் 29, 1954 ஆம் நாளன்று இந்திய அரசால் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் கிளைகள் மும்பை மற்றும் பெங்களூரில் நிறுவப்பட்டன. இந்தக் கலைக்கூடத்தில் காட்சிக்கூடத் தொகுப்பில் 2000க்கும் மேற்பட்ட கலைஞர்களின் 1700 க்கும் மேற்பட்ட கலைப்பொருள்கள் அமைந்துள்ளன. அவற்றுள் தாமஸ் டேனியல், ராஜா ரவி வர்மா, அபானிந்திரநாத் தாகூர், ரவீந்திரநாத் தாகூர், ககேந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ், ஜாமினி ராய், அமிர்தா ஷெர்-கில் உள்ளிட்ட கலைஞர்களின் கலைப்பொருள்கள் மற்றும் வெளிநாட்டுக் கலைஞர்களின் கலைப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு பாதுகாக்கப்பட்டுள்ள மிகப் பழமையான படைப்புகள் 1857 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகும். 12,000 சதுர மீட்டர் கண்காட்சி இடத்தைக் கொண்டு அமைந்துள்ள இந்த கலைக்கூடத்தின் புதுதில்லி கிளையானது உலகின் மிகப்பெரிய நவீன கலை அருங்காட்சியகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தில்லி: அருகிலுள்ள இடங்கள்
இந்தியாவின் வாயில்
580 m தொலைவில்
புராணா கிலா
960 m தொலைவில்
பாரத் மண்டபம்
1.3 km தொலைவில்
தேசிய அருங்காட்சியகம், புது தில்லி
1.5 km தொலைவில்
காந்தி சமிதி
2.2 km தொலைவில்
நிஜாமுதீன் தர்கா
2.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.