← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பெங்களூர் உலக வர்த்தக மையம்
இந்தியாவிலுள்ள கட்டிடம்
பிற மொழிகள்: English · Bahasa Melayu
விரைவான பதில்கள்
பெங்களூர் உலக வர்த்தக மையம் என்றால் என்ன?
பெங்களூர் உலக வர்த்தக மையம் (World Trade Center Bangalore) இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மல்லேசுவரத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிட வளாகமாகும்.
பெங்களூர் உலக வர்த்தக மையம் எங்கே உள்ளது?
பெங்களூர்; ஆயத்தொலைவு 13.0123, 77.5562.
இதன் கதை
பெங்களூர் உலக வர்த்தக மையம் (World Trade Center Bangalore) இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மல்லேசுவரத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிட வளாகமாகும். இவ்வளாகம் 2010-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. அதன் கட்டுமானத்திற்கான உலக வர்த்தக மைய சங்கத்தின் உரிமத்தைப் பெற்ற பிரிகேடு குழுமம் கட்டிடத்தைக் கட்டியது. இந்தியாவில் அமைந்த இரண்டாவது உலக வர்த்தக மையமாக இது மாறியது மும்பையில் உள்ள உலக வர்த்தக மையம் முதலாவதாக இந்தியாவில்.கட்டப்பட்டது. 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை 128 மீட்டர் உயரம் கொண்ட பெங்களூர் உலக வர்த்தக மையம் தென்னிந்தியாவில் மிக உயர்ந்த வர்த்தக மையக் கட்டிடமாக சிறப்பு பெற்றது. 2015-ஆம் ஆண்டு சென்னையில் டி.சி.எசு கோபுரம் 130 மீட்டர் உயரம் கொண்டதாக கட்டப்பட்டவுடன் இச்சிறப்பு சென்னை கட்டிடத்திற்கு மாறியது. 2010-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இது பெங்களூரில் உயர்ந்த கட்டிடமாக விளங்கியது. ஓரியன் பேரங்காடி, கொலம்பிய ஆசியா மருத்துவமனை, செரட்டன் விடுதி, பிரிகேட் பள்ளி மற்றும் பிரிகேட் நுழைவாயில் குடியிருப்புகள் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்த கட்டிடம் "பிரிகேட் நுழைவாயில்" என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த வளாகத்தின் ஒரு பகுதியாகும்.
பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்
அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம், பெங்களூரு
620 m தொலைவில்
Gandhi Bhavan, Bengaluru
3.7 km தொலைவில்
பெங்களூர் அரண்மனை
4.2 km தொலைவில்
தேசிய நவீன கலைக்கூடம், பெங்களூர்
4.3 km தொலைவில்
பெங்களூர் சுதந்திரப் பூங்கா
4.8 km தொலைவில்
Lok Bhavan, Bengaluru
5.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.