Landmark Wiki

← அமெரிக்க ஐக்கிய நாடுகள்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா என்றால் என்ன?

யெலோஸ்டோன் தேசியப் பூங்கா (Yellowstone National Park, "Yellowstone" என்ற பொருள் "மஞ்சக்கல்") அமெரிக்காவில் முதலாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா ஆகும்.

யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா எங்கே உள்ளது?

அமெரிக்க ஐக்கிய நாடுகள்; ஆயத்தொலைவு 44.6000, -110.5000.

இதன் கதை

யெலோஸ்டோன் தேசியப் பூங்கா (Yellowstone National Park, "Yellowstone" என்ற பொருள் "மஞ்சக்கல்") அமெரிக்காவில் முதலாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா ஆகும். மார்ச் 1, 1872 இன்றிய பூங்கா இருக்கும் இடத்தை அமெரிக்க அரசு தேசிய பூங்காவாக படைத்தது. இப்பூங்காவின் மிக புகழான இடம் ஓல்ட் பெய்த்ஃபுல் பீறிடும் வெந்நீரூற்று ஆகும். இது தவிர பல காடு, விலங்கு வகைகளும் யெலோஸ்டோன் ஏரியும் பார்க்க சுற்றுலா பயணிகள் இப்பூங்காவுக்கு வருகின்றனர். ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் இப்பூங்காவுக்கு வருகின்றனர். 11,000 ஆண்டுகளாக அமெரிக்கப் பழங்குடி மக்கள் இந்த இடத்தில் வசிக்கின்றனர். இன்று இப்பூங்கா 8,987 சதுக்க கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் பெரும்பான்மை வயோமிங் மாநிலத்தில் அமைந்துள்ளது, ஆனால் வடக்கிலும் மேற்கிலும் சிறிய பகுதிகள் ஐடஹோ மற்றும் மொன்டானா மாநிலங்களிலும் அமைந்துள்ளன. உலகில் வடக்கு மிதவெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய கெடுக்காத சூழ்நிலை இப்பூங்காவில் உள்ளது. கொடுங்கரடி, ஓநாய், எருமை போன்ற விலங்குகள் இப்பூங்காவில் வாழ்கின்றன. இப்பூங்காவிலுள்ள பெரிய காடுகள் மற்றும் புன்னிலங்களில் பல தாவர இனங்களும் வாழ்கின்றன. ஆண்டுதோரும் காட்டுத்தீ நடைபெறும்; 1988இல் நடந்த காட்டுத்தீயில் பூங்காவின் 36% எரிந்தது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள்: அருகிலுள்ள இடங்கள்

Waterton-Glacier International Peace Park

553.9 km தொலைவில்

Mesa Verde National Park

841.7 km தொலைவில்

Grand Canyon National Park

960.0 km தொலைவில்

Taos Pueblo

998.9 km தொலைவில்

யோசெமிட்டி தேசியப் பூங்கா

1062.7 km தொலைவில்

ஒலிம்பிக் தேசிய பூங்கா

1065.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.