← அமெரிக்க ஐக்கிய நாடுகள்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
யோசெமிட்டி தேசியப் பூங்கா
கலிஃபோர்னியாவில் ஒரு தேசிய பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
யோசெமிட்டி தேசியப் பூங்கா என்றால் என்ன?
யோசெமிட்டி தேசியப் பூங்கா (Yosemite National Park, , yoh-SEM-i-tee) கலிபோர்னியாவின் மேற்கு சியேரா நிவாடாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தேசியப் பூங்கா.
யோசெமிட்டி தேசியப் பூங்கா எங்கே உள்ளது?
அமெரிக்க ஐக்கிய நாடுகள்; ஆயத்தொலைவு 37.8500, -119.5167.
இதன் கதை
யோசெமிட்டி தேசியப் பூங்கா (Yosemite National Park, , yoh-SEM-i-tee) கலிபோர்னியாவின் மேற்கு சியேரா நிவாடாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தேசியப் பூங்கா. ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பூங்கா சேவையால் பராமரிக்கப்பட்டு வரும் இப்பூங்காவின் பரப்பளவு 747,956 ஏக்கர்கள் (1,168.681 ச மை; 302,687 எக்டேர்; 3,026.87 கிமீ2). 1984இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட யோசெமிட்டி உலகளவில் இங்குள்ள கருங்கல் முகடுகள், அருவிகள், தெளிந்த நீரோடைகள், மீப்பெரும் செகுவா மரவனங்கள், ஏரிகள், மலைகள்,புல்வெளிகள், பனிப்பாறைகள், மற்றும் உயிரியற் பல்வகைமைக்காக அறியப்படுகின்றது. கிட்டத்தட்ட 95% பூங்காப் பகுதி அடர்காட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஏறத்தாழ 4 மில்லியன் மக்கள் யோசெமிட்டிக்கு வருகின்றனர். வருபவர்களில் பெரும்பாலானோர் தங்கள் நேரத்தை யோசெமிட்டிப் பள்ளத்தாக்கின் 5.9 சதுர மைல்கள் (15 கிமீ2) பரப்பில் கழிக்கின்றனர். 2016இல் இப்பூங்காவின் வரலாற்றில் சாதனையளவாக 5 மில்லியன் பேர் வந்துள்ளனர். தேசியப் பூங்கா குறித்த கருத்தியல் உருவாக்கத்தில் யோசெமிட்டி முக்கியப் பங்கு வகித்தது. துவக்கத்தில், காலென் கிளார்க்கும் மற்றவர்களும் யோசெமிட்டியை பாதுகாக்கப் போராடினர்; இறுதியில் 1864இல் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் யோசெமிட்டி நல்கையில் ஒப்பமிட்டார்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்: அருகிலுள்ள இடங்கள்
Redwood National and State Parks
542.8 km தொலைவில்
Grand Canyon National Park
686.5 km தொலைவில்
Mesa Verde National Park
974.9 km தொலைவில்
யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா
1062.7 km தொலைவில்
ஒலிம்பிக் தேசிய பூங்கா
1170.6 km தொலைவில்
Taos Pueblo
1247.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.