← அமிருதசரசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வால்மீகி தீர்த்தக் கோயில்
விரைவான பதில்கள்
வால்மீகி தீர்த்தக் கோயில் என்றால் என்ன?
ஸ்ரீ ராமர் தீர்த்தக் கோயில் அல்லது பகவான் வால்மீகி தீர்த்த ஆசிரமம், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிதர்சரஸ் மாவட்டத் தலைமையிடமான அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ளது.
வால்மீகி தீர்த்தக் கோயில் எங்கே உள்ளது?
அமிருதசரசு; ஆயத்தொலைவு 31.6742, 74.7558.
இதன் கதை
ஸ்ரீ ராமர் தீர்த்தக் கோயில் அல்லது பகவான் வால்மீகி தீர்த்த ஆசிரமம், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிதர்சரஸ் மாவட்டத் தலைமையிடமான அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ளது. பகவான் இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலை வால்மீகி தீர்த்த ஆசிரமம் என்றும் அழைப்பர். இக்கோயிலை பல நூற்றாண்டுகளாக பல முக்கிய துறவிகள் மற்றும் முனிவர்கள் பார்வையிட்டதாக நம்பப்படுகிறது. கோயில் பல முறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. தற்போதைய அமைப்பு 1 டிசம்பர் 2016 கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயிலில் கருவறையில் 800 கிலோ கிராம் எடை மற்றும் 8 அடி உயரம் கொண்ட வால்மீகி முனிவரின் தங்கச் சிலை நிறுவப்பட்டுள்ளது. வால்மீகி தீர்த்த ஆசிரம மேம்பாட்டுக் குழுவால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோவில் வளாகம் பரந்து விரிந்துள்ளது மற்றும் பல்வேறு இந்து தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல சிறிய கோவில்களை உள்ளடக்கியது. இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதன்மைக் கோயில் வெள்ளை பளிங்குக் கற்களால் ஆன அழகிய அமைப்பாகும். கோவிலின் கட்டிடக்கலை பஞ்சாபில் பொதுவான இந்து மற்றும் இஸ்லாமிய பாணிகளை ஒருங்கிணைக்கிறது. கோவிலின் குவிமாடம் மற்றும் கோபுரங்கள் கவர்ச்சிகரமானவை மற்றும் தூரத்திலிருந்து பார்க்க முடியும். கோயில் வளாகத்தில் ஒரு பெரிய குளியல் கட்டம் உள்ளது. இது பக்தர்கள் புனித நீராட பயன்படுத்துகிறது.
அமிருதசரசு: அருகிலுள்ள இடங்கள்
அமிர்தசரசு படைவீரர் குடியிருப்பு
8.2 km தொலைவில்
துர்க்கியானா கோவில்
10.6 km தொலைவில்
கோபிந்த்கர் கோட்டை
11.2 km தொலைவில்
Ram Bagh
12.3 km தொலைவில்
அகால் தக்த்
12.8 km தொலைவில்
பிரிவினை அருங்காட்சியகம்
12.8 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.