Landmark Wiki

← எசுப்பானியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அல்டாமிராக் குகை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Español

அல்டாமிராக் குகை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அல்டாமிராக் குகை என்றால் என்ன?

அல்டாமிரா குகை (Cave of Altamira) யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.

அல்டாமிராக் குகை எங்கே உள்ளது?

எசுப்பானியா; ஆயத்தொலைவு 43.3825, -4.1203.

இதன் கதை

அல்டாமிரா குகை (Cave of Altamira) யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். இது வடக்கு எசுப்பானியாவில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற குகை மற்றும் பாறை ஓவியங்களாகும். இதில் காட்டு விலங்குகள் மற்றும் மனிதனின் கைகள் வரையப்பட்டுள்ளன. இதன் காலம் கி.மு. 14000 என வரையறுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மிகப்பழைய ஓவியம் 35,000 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதாகக் கருதப்படுகிறது. அல்டாமிரா என்பதன் வார்த்தை எசுப்பானிய மொழியிலிருந்து வந்ததாகும். அதன் பொருள் உயர்ந்த பார்வை என்பதாகும். இவ்விடம் எசுப்பானியாவில் உள்ள காண்டாபிரியா, வடக்கு சாண்டாண்டருக்கு முப்பது கி.மீ. தொலைவில் உள்ளது. வரலாற்றுக்கு முந்திய கால ஓவியங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட ஐரோப்பாவில் உள்ள முதல் குகை இதுவாகும். மார்செலினோ சான்சு டி சவுத்துவோலா என்பவரே இதை வெளிப்படுத்திப் பிரபலப்படுத்தினார். இவர் விலனோவா யி பியேரா என்பவரின் உதவியுடன் தனது ஆய்வை 1880ல் வெளியிட்டார். எனினும், இதன் தொன்மை குறித்து அறிஞர்களிடையே சர்ச்சை ஏற்பட்டு 1902 ஆம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர் இப்பகுதியில் மேலும் பல வரலாற்றுக்கு முந்திய கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இதன் தொன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எசுப்பானியா: அருகிலுள்ள இடங்கள்

Cave of Altamira and Paleolithic Cave Art of Northern Spain

590 m தொலைவில்

பேர்கோஸ் பெருங்கோவில்

120.7 km தொலைவில்

அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள்

124.6 km தொலைவில்

Monasteries of San Millán de la Cogolla

155.8 km தொலைவில்

Routes of Santiago de Compostela: Camino Francés and Routes of Northern Spain

185.6 km தொலைவில்

Las Médulas

238.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.