← கொழும்பு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கொழும்பு கலங்கரை விளக்கம்
பிற மொழிகள்: English · Español
விரைவான பதில்கள்
கொழும்பு கலங்கரை விளக்கம் என்றால் என்ன?
கொழும்பு கலங்கரை விளக்கம் அல்லது கொழும்பு வெளிச்சவீடு எனப்படுவது, இலங்கைத் தலைநகர் கொழும்பில் துறைமுகத்துக்கு அண்மையில் உள்ள கலங்கரை விளக்கம் ஆகும்.
கொழும்பு கலங்கரை விளக்கம் எங்கே உள்ளது?
கொழும்பு; ஆயத்தொலைவு 6.9363, 79.8408.
இதன் கதை
கொழும்பு கலங்கரை விளக்கம் அல்லது கொழும்பு வெளிச்சவீடு எனப்படுவது, இலங்கைத் தலைநகர் கொழும்பில் துறைமுகத்துக்கு அண்மையில் உள்ள கலங்கரை விளக்கம் ஆகும். இலங்கைத் துறைமுக அதிகாரசபையினால் இயக்கிப் பேணப்பட்டுவரும் இது கொழும்புத் துறைமுகத்திற்குத் தெற்கேயுள்ள கல்பொக்க முனையில், மரைன் டிரைவ் சாலையோரம் கடலைப் பார்த்தபடி அமைந்துள்ளது. கொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டங்களின்போது கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் பழைய கலங்கரை விளக்கத்தின் ஒளியை மறைத்ததனால், அது கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக 1952-இல் இப்புதிய கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. இது இலங்கையின் முதலாவது பிரதமரான கௌரவ டி. எஸ். சேனநாயக்காவினால் திறந்துவைக்கப்பட்டது. 29 மீட்டர் (95 அடி) உயரம் கொண்ட இந்தக் கலங்கரை விளக்கம் 12 மீட்டர் (39 அடி) உயரமான மேடையொன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இம்மேடையின் மேல் நான்கு மூலைகளிலும் நான்கு சிங்கச் சிற்பங்கள் உள்ளன. இதன்மீது ஏறி பரந்த கடற்காட்சியைப் பார்க்க முடியும் என்பதால் பொது மக்களும், கொழும்புக்குச் சுற்றுலா வருபவர்களும் இவ்விடத்துக்கு வருவர். இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த காலத்தில், துறைமுகம், கடற்படைத் தலைமையகம் போன்ற உயர் பாதுகாப்புப் பகுதிகளுக்கு அண்மையில் இருந்ததால், இப்பகுதிக்கு மக்கள் வருவது கட்டுப்படுத்தப்பட்டது.
கொழும்பு: அருகிலுள்ள இடங்கள்
சனாதிபதி மாளிகை, கொழும்பு
190 m தொலைவில்
பழைய கொழும்பு கலங்கரை விளக்கம்
280 m தொலைவில்
The Kingsbury
400 m தொலைவில்
கிராண்ட் ஓரியண்டல் ஓட்டல்
500 m தொலைவில்
பழைய நாடாளுமன்றக் கட்டடம், கொழும்பு
630 m தொலைவில்
One Galle Face
1.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.