← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் என்றால் என்ன?
விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பங்களூரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.
விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
பெங்களூர்; ஆயத்தொலைவு 12.9751, 77.5964.
இதன் கதை
விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பங்களூரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது, இந்திய அரசின் அறிவியல் அருங்காட்சியகங்களுக்கான தேசிய அவையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம், பொறியியலாளரும், அரசியலாளரும் ஆகிய சர் எம். விசுவேசுவரய்யாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. இது 1962 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக் கழகத்திடம் கையளிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டில், அறிவியல் அருங்காட்சியகங்களுக்கான தேசிய அவை உருவாக்கப்பட்டபோது, விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் அதன் தென்னகத் தலைமையகம் ஆனது. இந்தியா முழுவதும் 28 மையங்களைக் கொண்டுள்ள இந்த அவையின் நோக்கம் காட்சிப்பொருட்கள் மூலம் அறிவியலைப் பரப்புவதாகும். அருங்காட்சியகத்தின் வழக்கில் உள்ள பொருளின்படி பார்த்தால், விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் ஒரு அருங்காட்சியம் அல்ல. நிலையான மாதிரி உருவங்களைக் கொண்டிருக்கும் அருங்காட்சியகங்களைப் போலன்றி இங்கே காட்சிப்பொருள்|காட்சிப்பொருட்களுடனான இடைவினைகளின் மூலம் அறிவியலின் பல்வேறு விடயங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் இதனை ஒரு அறிவியல் மையம் என்பது பொருந்தும்.
பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்
அரசு அருங்காட்சியகம், பெங்களூரு
80 m தொலைவில்
வெங்கடப்பா கலைக்கூடம்
110 m தொலைவில்
பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை
280 m தொலைவில்
கப்பன் பூங்கா
330 m தொலைவில்
விதான சௌதா
800 m தொலைவில்
Lok Bhavan, Bengaluru
970 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.