Landmark Wiki

← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தோலாவிரா

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

தோலாவிரா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தோலாவிரா என்றால் என்ன?

தோலாவிரா (Dholavira, குசராத்தி: ધોળાવીરા) என்பது, இந்தியாவின் மேற்கில் குசராத் மாநிலத்தில், கச் மாவட்டத்தில் உள்ள பாச்சோ தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் களம்.

தோலாவிரா எங்கே உள்ளது?

இந்தியா; ஆயத்தொலைவு 23.8886, 70.2136.

இதன் கதை

தோலாவிரா (Dholavira, குசராத்தி: ધોળાવીરા) என்பது, இந்தியாவின் மேற்கில் குசராத் மாநிலத்தில், கச் மாவட்டத்தில் உள்ள பாச்சோ தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் களம். இது புஜ் நகரத்திலிருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ளது. இத் தொல்லியல் களத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் தெற்குப் புறமாக அமைந்துள்ள தற்கால ஊரின் பெயரால் இக்களத்துக்குப் பெயர் ஏற்பட்டது. உள்ளூரில் இதற்கு கொட்டாடா டிம்பா என்ற பெயரும் உண்டு. தோலா விரா கிராமம் கட்ச் பாலைவனத்தில் அமைந்திருந்தாலும், வளம் மிக்க மற்றும் கலாசார பன்முகத்தன்மை மிகுந்த நகரமாக இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிக மக்கள் பாலைவனத்துக்குள் ஒரு நவீன நகரத்தையே உருவாக்கியுள்ளனர். தோலாவிரா நகரத்திற்கு அருகில் இரு பக்கங்களிலிலும் மழைக்காலங்களில் மட்டும் நீர் ஓடும் மான்சர் மற்றும் மான்கர் என இரண்டு ஆறுகள் பாய்ந்துள்ளது. இவ்வாறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி, ஆற்று நீரை தோலாவிரா நகரத்திற்கு திருப்பி, கால்வாய், நிலத்தடி நீர்த் தொட்டிகள் கட்டமைத்து தங்களது நீர்த் தேவைகளை சமாளித்துள்ளனர். சுனாமி ஆழிப்பேரலை, தோலா விரா நகரம் அழியக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அங்கு ஆய்வு செய்தவர்கள் கருதுகின்றனர். இத் தொல்லியல் களம், சிந்துவெளி நாகரிகத்துக்கு உரிய அரப்பா பண்பாட்டின் அழிபாடுகளைக் கொண்டுள்ளது.

இந்தியா: அருகிலுள்ள இடங்கள்

இராணியின் படிக்கிணறு, குஜராத்

192.0 km தொலைவில்

Historic City of Ahmadabad

260.5 km தொலைவில்

சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா

373.6 km தொலைவில்

இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்

462.3 km தொலைவில்

Maratha Military Landscapes of India

520.6 km தொலைவில்

எல்லோரா

668.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.