← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
எலியட்ஸ் கடற்கரை
சென்னையில் உள்ள கடற்கரை
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
எலியட்ஸ் கடற்கரை என்றால் என்ன?
எலியட்ஸ் கடற்கரை சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் அமைந்த கடற்கரை ஆகும்.
எலியட்ஸ் கடற்கரை எங்கே உள்ளது?
சென்னை; ஆயத்தொலைவு 12.9995, 80.2724.
இதன் கதை
எலியட்ஸ் கடற்கரை சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் அமைந்த கடற்கரை ஆகும். மெரீனா கடற்கரையின் தெற்கில் அமைந்த இக்கடற்கரை அருகில் அஷ்டலட்சுமி கோயிலும் வேளாங்கன்னி தேவாலயமும் அமைந்துள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இக்கடற்கரை வெள்ளையர்கள் மட்டுமே வரக்கூடியதாக இருந்தது.முந்தைய சென்னை ஆளுனர் எட்வர்ட் எலியட்டின் பெயரால் வழங்கப்பட்ட இந்தக் கடற்கரை பரவலாக பெசன்ட் நகர் கடற்கரை என்றே அறியப்படுகிறது. சென்னையின் இளைய தலைமுறையினர் கூடும் இடமாக தற்போது இது உள்ளது. பல வகைப்பட்ட உணவகங்களும் மனமகிழ்மன்றங்களும் அவர்களுக்கான ஈர்ப்பை கூட்டுகின்றன. வார இறுதி நாட்களில் வண்டிகளை நிறுத்தக்கூட இடம் கிடைக்காத நிலை உள்ளது.
சென்னை: அருகிலுள்ள இடங்கள்
திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்
2.0 km தொலைவில்
பக்கிங்காம் கால்வாய்
2.7 km தொலைவில்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
3.8 km தொலைவில்
சென்னை சாந்தோம் பேராலயம்
3.8 km தொலைவில்
கிரௌன் பிளாசா சென்னை அடையாறு பார்க்
4.1 km தொலைவில்
கிண்டி தேசியப் பூங்கா
4.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.