Landmark Wiki

← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கிண்டி தேசியப் பூங்கா

பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español

கிண்டி தேசியப் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கிண்டி தேசியப் பூங்கா என்றால் என்ன?

கிண்டி தேசியப் பூங்கா சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா.

கிண்டி தேசியப் பூங்கா எங்கே உள்ளது?

சென்னை; ஆயத்தொலைவு 13.0036, 80.2293.

இதன் கதை

கிண்டி தேசியப் பூங்கா சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா. இது, இந்தியாவில் எட்டாவது சிறிய தேசியப் பூங்காவாகும். ஒரு மாநகரின் எல்லைக்குள் அமைந்திருக்கும் அரிய வகை தேசியப் பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று. இப்பகுதி பரங்கியர் காலத்தில் கில்பெர்ட் ரோடிரிக்கிசு (Gilbert Rodericks) என்பவரின் சொந்த வேட்டையாடும் பகுதியாக ‘கிண்டி லாட்ஜ்’ எனப்பட்டது. இதை, 1821 ஆம் ஆண்டில் அன்றைய மதராஸ் அரசு ரோட்ரிக்ஸிடம் இருந்து அந்த இடத்தை அன்றைய மதிப்பில் 35,000 ரூபாய்க்கு வாங்கியது. இந்த காட்டுப் பகுதியைக் காப்பாற்றுவதற்காக, 1910 இல் மொத்த 505 எக்டர் நிலத்தையும் அரசு காப்புக் காடாக அறிவித்தது. பின்னர் 1958-இல் தமிழ் நாடு வனத்துறையின் கண்காணிப்பிற்கு மாற்றப்பட்டது. இருந்தாலும் 1961 இல் இருந்து 1977 க்குள் 172 எக்டர் நிலம் ஐ.ஐ.டி., காந்தி மண்டபம் போன்றவற்றின் பயன்பாட்டுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. எஞ்சியிருந்த 270.57 எக்டேர் காட்டுப் பகுதியை 1978 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அரசு அறிவித்தது.

சென்னை: அருகிலுள்ள இடங்கள்

ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல்

1.3 km தொலைவில்

பக்கிங்காம் கால்வாய்

3.3 km தொலைவில்

கிரௌன் பிளாசா சென்னை அடையாறு பார்க்

3.6 km தொலைவில்

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்

4.0 km தொலைவில்

எலியட்ஸ் கடற்கரை

4.7 km தொலைவில்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்

5.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.