← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
புனித ஜார்ஜ் கோட்டை
பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
புனித ஜார்ஜ் கோட்டை என்றால் என்ன?
புனித ஜார்ஜ் கோட்டை (Fort St.
புனித ஜார்ஜ் கோட்டை எங்கே உள்ளது?
சென்னை; ஆயத்தொலைவு 13.0797, 80.2869.
இதன் கதை
புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George) இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும். 1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதன் வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் அவர்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலாக்கா நீரிணைக்கு அண்மையில் துறைமுகம் ஒன்றின் தேவையைக் கம்பனியினர் உணர்ந்தனர். மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர். புனித ஜார்ஜ் கோட்டை நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது.
சென்னை: அருகிலுள்ள இடங்கள்
புனித மேரி தேவாலயம், சென்னை
120 m தொலைவில்
ஆர்மீனியத் தேவாலயம், சென்னை
1.0 km தொலைவில்
காளிகாம்பாள் கோவில்
1.7 km தொலைவில்
ரிப்பன் கட்டடம்
1.7 km தொலைவில்
தர்ம கிடங்கு மசூதி
1.8 km தொலைவில்
கலச மஹால்
1.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.