← துருக்கி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பெருவயிறு மலை
யுனெஸ்கோ உலகப் பராம்பரியக் களம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பெருவயிறு மலை என்றால் என்ன?
பெருவயிறு மலை (Göbekli Tepe, Turkish: [ɟœbecˈli teˈpe], கோபெக்கிலி தெப்பே என்றால் துருக்கி மொழியில் பெருவயிறு மலை என்று பொருள்) என்பது துருக்கியின் தென்கிழக்கு அனதோலியா பிரதேசத்தில் உள்ள ஒரு கற்காலத் தொல்பொருள் தளமாகும்.
பெருவயிறு மலை எங்கே உள்ளது?
துருக்கி; ஆயத்தொலைவு 37.2236, 38.9217.
இதன் கதை
பெருவயிறு மலை (Göbekli Tepe, Turkish: [ɟœbecˈli teˈpe], கோபெக்கிலி தெப்பே என்றால் துருக்கி மொழியில் பெருவயிறு மலை என்று பொருள்) என்பது துருக்கியின் தென்கிழக்கு அனதோலியா பிரதேசத்தில் உள்ள ஒரு கற்காலத் தொல்பொருள் தளமாகும். இத்தளம், மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தில், அதாவது கி.மு. 10,000 முதல் கி.மு. 8,000 வரை, அப்பகுதி மக்களின் சமூக, சமயச் சடங்குகளுக்கான இடமாக விளங்கியது. சான்லியூர்பா மாகாணத்தில் உள்ள ஓரென்சிக் நகரத்திற்கு வடகிழக்கே 12 கி.மீ. மீட்டர் தொலைவில், 15 மீட்டர் உயரமும், 300 மீட்டர் சுற்றவளவும் கூடிய பெறுவயிறு மலை, கடல் மட்டத்திலிருந்து 760 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2008-இல் யுனெஸ்கோ நிறுவனம் இத்தளத்தை உலகப் பராம்பரியக் களமாக அறிவித்தது. பெருவயிறு மலைத் தொல்லியல் மேட்டின் முதல் கட்டத்தில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) காலத்தில், உலகின் முதல் பெருங்கற்காலத்திய வட்ட வடிவக் கற்தூண்கள் T வடிவத்தில் நிறுவிப்பட்டதை அகழ்வாய்வுவில் கண்டுபிடிக்கப்பட்டது. பெருவயிறு மலை தொல்லியல் களத்தில் கிடைத்த 200 கற்தூண்களில், 20 கற்தூண்கள் ஒவ்வொன்றும் 6 மீட்டர் உயரமும், 10 டன் எடையும் கொண்டுள்ளது. இக்கற்தூண்கள் ஒவ்வொன்றும் படுகைப்பாறைகளில் பொருத்தப்பட்டுள்ளது. பெருவயிறு மலையில் இரண்டாம் காலக் கட்டமானது மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) காலத்தியதாகும்.
துருக்கி: அருகிலுள்ள இடங்கள்
நெம்ருத் மலை
85.7 km தொலைவில்
Arslantepe
137.9 km தொலைவில்
Divriği Great Mosque and Hospital
248.8 km தொலைவில்
கேட்டல்ஹோயக்
540.1 km தொலைவில்
Ani
543.4 km தொலைவில்
Gordion
662.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.