← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி
இந்தியாவின் வரலாற்ற்க் கோவிலள்
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி என்றால் என்ன?
கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி (Khajuraho Group of Monuments) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் ஜான்சிக்கு தென்கிழக்கே அமைந்துள்ள இந்து மற்றும் சைனக் கோயில்களின் குழுமமாகும்.
கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி எங்கே உள்ளது?
இந்தியா; ஆயத்தொலைவு 24.8544, 79.9214.
இதன் கதை
கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி (Khajuraho Group of Monuments) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் ஜான்சிக்கு தென்கிழக்கே அமைந்துள்ள இந்து மற்றும் சைனக் கோயில்களின் குழுமமாகும். இவை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களமாகும். இந்தக் கோவில்கள் இந்துக் கோயில் கட்டிடக்கலை பாணி குறியீடுகளுக்கும், அவற்றின் பாலியல் சிற்பங்களுக்கும் பிரபலமானது. பெரும்பாலான கஜுராஹோ கோவில்கள் பொ.ச.885க்கும் 1050க்கும் இடையில் சந்தேல வம்சத்தால் கட்டப்பட்டது. கஜுராஹோ கோவில் தளத்தில் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 85 கோவில்கள் இருந்ததாக வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன. இவற்றில், ஆறு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 25 கோவில்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எஞ்சியிருக்கும் கோயில்களில், கந்தாரிய மகாதேவர் கோயில் சிக்கலான விவரணங்கள், அடையாளங்கள், பண்டைய இந்திய கலையின் வெளிப்பாடுகளுடன் கூடிய ஏராளமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னங்கள் கட்டப்பட்டபோது, அந்த இடத்திலுள்ள சிறுவர்கள் பெரியர்வர்களாக ஆகும் வரை (ஆண்மை அடையும் வரை) பிரம்மச்சாரிகளாக வாழ்ந்து வந்தனர். மேலும் இந்த சிற்பங்கள் 'குடும்பத்தலைவராக' உலக பங்கு பற்றி அறிய அவர்களுக்கு உதவியது. கஜுராஹோ குழுமக் கோவில்கள் ஒன்றாகக் கட்டப்பட்டன.
இந்தியா: அருகிலுள்ள இடங்கள்
சாஞ்சி
269.0 km தொலைவில்
பீம்பேட்கா பாறை வாழிடங்கள்
316.9 km தொலைவில்
மகாபோதிக் கோயில், புத்தகயை
512.1 km தொலைவில்
இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்
532.2 km தொலைவில்
நாளந்தா
557.4 km தொலைவில்
நந்தா தேவி தேசியப் பூங்கா
618.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.