Landmark Wiki

← தில்லி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தாமரைக் கோயில்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

தாமரைக் கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தாமரைக் கோயில் என்றால் என்ன?

தாமரைக் கோயில் (Lotus temple) என்பது இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள பகாய் வழிபாட்டுத்தலம் ஆகும்.

தாமரைக் கோயில் எங்கே உள்ளது?

தில்லி; ஆயத்தொலைவு 28.5533, 77.2585.

இதன் கதை

தாமரைக் கோயில் (Lotus temple) என்பது இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள பகாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக "தாமரைக் கோயில்" (கமல் மந்திர்) என அறியப்படுகிறது. இந்த பகாய் வழிபாட்டுத்தலம் தில்லியின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. மற்ற அனைத்து பகாய் வழிபாட்டு இல்லங்களைப் போலவே, தாமரை கோயிலும் மதம் அல்லது வேறு எந்த தகுதியையும் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்காகவும் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் தாமரை இதழ் போன்ற வடிவத்தில் தனித்தனியாக நிற்கும் 27 வெண் பளிங்குக் கற்களாலான அமைப்புகள் உள்ளன. இவை மூன்று சேர்ந்த ஒரு தொகுதியாக அடுக்கப்பட்டாற்போன்று ஒன்பது பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. 1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்தத் தாமரைக்கோயிலில் சுமார் 40 மீட்டர் உயரம் கொண்ட ஒரு மத்திய மண்டபமும் அதில் ஒன்பது கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இம்மண்டபத்தில் ஒரே நேரத்தில் 1300 பேர் அமர்ந்து வழிபாடு செய்யலாம்., இது எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான செய்தித்தாள் மற்றும் நாளிதழ் கட்டுரைகளில் தனித்தன்மையுடன் வெளிவந்துள்ளது.

தில்லி: அருகிலுள்ள இடங்கள்

உமாயூனின் சமாதி

4.5 km தொலைவில்

நிஜாமுதீன் தர்கா

4.5 km தொலைவில்

துக்ளகாபாத் கோட்டை

4.6 km தொலைவில்

லோதி தோட்டங்கள்

5.8 km தொலைவில்

சப்தர்ஜங்கின் கல்லறை

6.2 km தொலைவில்

புராணா கிலா

6.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.