← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மரீனா பே சாண்ட்ஸ்
சிங்கப்பூரில் அமைந்துள்ள ஒரு கேளிக்கை மையம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
மரீனா பே சாண்ட்ஸ் என்றால் என்ன?
மரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) எனும் ஒருங்கிணைந்த கேளிக்கை மையம் சிங்கப்பூரின் மரீனா பே பகுதியில் அமைந்துள்ளது.
மரீனா பே சாண்ட்ஸ் எங்கே உள்ளது?
சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.2825, 103.8600.
இதன் கதை
மரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) எனும் ஒருங்கிணைந்த கேளிக்கை மையம் சிங்கப்பூரின் மரீனா பே பகுதியில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகஸ் குழுமத்தின் ஓர் அங்கம் இது. 8 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இதில் கேசினோ எனும் சூதாட்ட மையம், தங்கும் விடுதி, இரண்டு திரையரங்குகள், அருங்காட்சியகம், கடைத்தொகுதிகள் மற்றும் கூட்டங்கள், விழாக்கள் நடத்துவதற்கான அரங்குகள் உள்ளன. தங்கும் விடுதியின் உச்சியில் நீச்சல் குளமும் அமைந்துள்ளது. விடுதியில் 2561 அறைகளும், 1,300,000 சதுர அடியில் கூட்டங்கள் மற்றும் விழாக்கள் நடத்துவதற்கான அரங்கும், 800,000 சதுர அடிப்பரப்பில் கடைத் தொகுதியும், 500 மேஜைகள் மற்றும் 1,600 விளையாட்டு இயந்திரங்கள் கஸினோவிலும் உள்ளது. 340 மீட்டர் நீளமுள்ள 'ஸ்கைபார்க்' ஹோட்டலின் 57 வது தளத்தில் உள்ளது. இதில் 150 மீட்டரில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. மொத்தம் 3,900 மக்கள் இந்த ஸ்கைபார்க்கில் ஒரே நேரத்தில் இருக்க முடியும்.ஹோட்டல் மூன்று கோபுரங்களாக உள்ளது இதில் வடக்கு கோபுரத்தில் வெளியே 67 மீட்டர் நீளத்திற்கு ஸ்கைபார்க் நீட்டிக் கொண்டிருக்கும். 2009 -ல் திறப்பதாக திட்டமிடப்பட்டிருந்த இம்மையம் பொருளாதார நெருக்கடி, மனிதவளப் பற்றாக்குறை, பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் 2010 ஜூன் 23 மற்றும் 24 தேதிகளில் திறக்கப்பட்டது.
சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்
கலை அறிவியல் அருங்காட்சியகம்
410 m தொலைவில்
Helix Bridge
570 m தொலைவில்
Gardens by the Bay
610 m தொலைவில்
The Float @ Marina Bay
660 m தொலைவில்
மெர்லயன் பூங்கா
780 m தொலைவில்
மெர்லயன்
780 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.