Landmark Wiki

← சோத்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மெக்ரன்கர்

இராசத்தானிலுள்ள ஒரு கோட்டை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español

மெக்ரன்கர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மெக்ரன்கர் என்றால் என்ன?

மெக்ரன்கர் (Mehrangarh) என்பது இந்தியாவின் இராசத்தானில் உள்ள சோத்பூரில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோட்டையாகும்.

மெக்ரன்கர் எங்கே உள்ளது?

சோத்பூர்; ஆயத்தொலைவு 26.2981, 73.0189.

இதன் கதை

மெக்ரன்கர் (Mehrangarh) என்பது இந்தியாவின் இராசத்தானில் உள்ள சோத்பூரில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோட்டையாகும். இது ஒரு மலை உச்சியில் அமைந்துள்ளாது. சுற்றியுள்ள சமவெளிகளில் இருந்து சுமார் 122 மீட்டர் உயரத்தில் உள்ளது. வளாகம் 1,200 ஏக்கர் (486 எக்டேர்) பரப்பளவில் பரவியுள்ளது. இது ஆரம்பத்தில் 1459 ஆம் ஆண்டு ராத்தோர் குலத்தின் ராஜபுத்திர ஆட்சியாளரான ராவ் ஜோதாவால் கட்டப்பட்டது. இருப்பினும் தற்போதுள்ள கட்டமைப்புகளில் பெரும்பாலானவை 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. 1806 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூர் மற்றும் பிகானேர் படைகளை வென்றதன் நினைவாக மகாராஜா மான் சிங்கால் கட்டப்பட்ட பிரதான நுழைவாயில் ஜெய் போல் ('வெற்றி வாயில்' என்று பொருள்படும்) உள்ளிட்ட ஏழு வாயில்கள் கோட்டையில் உள்ளன. பத்தேபோல் என்றா வாயில் முகலாயர்களுக்கு எதிரான மகாராஜா அஜித் சிங் வெற்றியை நினைவுகூறுகிறது. இதன் எல்லைகளுக்குள், பல அரண்மனைகள், அவற்றின் சிக்கலான சிற்பங்கள் மற்றும் விரிவான முற்றங்கள், சாமுண்டி கோயில் மற்றும் பல்வேறு நினைவுச்சின்னங்களை வைத்திருக்கும் அருங்காட்சியகம் ஆகியவற்றைக் காணலாம். ஒரு வளைந்த சாலை கீழே நகரத்திற்குச் செல்கிறது. ஜெய்ப்பூரின் படைகளைத் தாக்கிய பீரங்கி குண்டுகளின் அடையாளங்கள் இன்றும் இரண்டாவது வாயிலில் காணப்படுகின்றன.

சோத்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Toorji Ka Jhalra

430 m தொலைவில்

காந்த கார்

610 m தொலைவில்

ராவ் ஜோதா பாலைவனப் பாறை பூங்கா

760 m தொலைவில்

ஜஸ்வந்த் தடா

910 m தொலைவில்

Sardar Government Museum

1.5 km தொலைவில்

உமைத் பவான் அரண்மனை

3.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.