← எருசலேம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஒலிவ மலை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ஒலிவ மலை என்றால் என்ன?
ஒலிவ மலை (Mount of Olives அல்லது Mount Olivet, எபிரேயம்: הַר הַזֵּיתִים, Har HaZeitim; அரபி: جبل الزيتون, الطور, Jabal az-Zaytūn, Aț-Țūr) என்பது எருசலேம் பழைய நகருடன் கிழக்கிலிருந்து இணையும் மலைத் தொடராகும்.
ஒலிவ மலை எங்கே உள்ளது?
எருசலேம்; ஆயத்தொலைவு 31.7783, 35.2439.
இதன் கதை
ஒலிவ மலை (Mount of Olives அல்லது Mount Olivet, எபிரேயம்: הַר הַזֵּיתִים, Har HaZeitim; அரபி: جبل الزيتون, الطور, Jabal az-Zaytūn, Aț-Țūr) என்பது எருசலேம் பழைய நகருடன் கிழக்கிலிருந்து இணையும் மலைத் தொடராகும். இதன் சரிவுப் பகுதிகளை ஒலிவ மரங்கள் மூடியிருந்ததால் இதற்கு ஒலிவ மலை என்ற பெயர் கிடைத்தது. இதன் தென் பகுதி பண்டைய யூதேய அரசின் இடுகாடாகவிருந்தது. இம்மலை யூதப் பாரம்பரியத்தின் மத்தியமாகவிருக்கிறது. இது 3,000 வருடங்களாக யூதர்களின் இடுகாடாக இருந்து வந்து, கிட்டத்தட்ட 150,000 சமாதிகளைக் கொண்டுள்ளது. இயேசுவின் வாழ்வின் சில முக்கிய சம்பவங்கள் நற்செய்திகளில் தொடர்புள்ளவாறு இங்கு இடம்பெற்றுள்ளன. திருத்தூதர் பணிகள் இங்கிருந்துதான் இயேசு விண்ணகம் சென்றார் எனக் குறிப்பிடுகின்றது. இயேசுவுடனும் மரியாளுடனும் இப்பகுதி தொடர்பு பெறுவதால் பண்டைய காலந்தொட்டு இன்று முதல் கிறித்தவர்களின் வழிபாட்டுத்தளமாகவும் கிழக்கு, கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து கிறித்தவர்களின் முக்கிய யாத்திரைத்தளமாகவும் இது விளங்குகின்றது.
எருசலேம்: அருகிலுள்ள இடங்கள்
கெத்சமனி
370 m தொலைவில்
தங்க வாயில்
660 m தொலைவில்
எருசலேம் கோவில்
790 m தொலைவில்
அல் அக்சா பள்ளிவாசல்
800 m தொலைவில்
பாறைக் குவிமாடம்
800 m தொலைவில்
இரண்டாம் கோவில்
810 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.