Landmark Wiki

← எருசலேம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அல் அக்சா பள்ளிவாசல்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அல் அக்சா பள்ளிவாசல்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அல் அக்சா பள்ளிவாசல் என்றால் என்ன?

அல் அக்சா பள்ளிவாசல் (அரபு:المسجد الاقصى, மஸ்ஜித் அல்-அக்ஸா) யெருசலேமிலுள்ள, மாஜெத் குன்று அல்லது அல்-ஹாரம் ஆஷ்-ஷெரிப் (Noble Sanctuary) எனப்படும், சமயக் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

அல் அக்சா பள்ளிவாசல் எங்கே உள்ளது?

எருசலேம்; ஆயத்தொலைவு 31.7761, 35.2358.

இதன் கதை

அல் அக்சா பள்ளிவாசல் (அரபு:المسجد الاقصى, மஸ்ஜித் அல்-அக்ஸா) யெருசலேமிலுள்ள, மாஜெத் குன்று அல்லது அல்-ஹாரம் ஆஷ்-ஷெரிப் (Noble Sanctuary) எனப்படும், சமயக் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இசுலாம்களின் மரபுப்படி முகமது நபி அவர்களின் விண்ணேற்றம் இங்கிருந்தே நிகழ்ந்தது என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை ஆகும். இதன் காரணமாக, இந்த பள்ளிவாசல் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதமான பள்ளிவாசலாகக் கருதப்படுகிறது. பாறைக் குவிமாடம் இற்குப் பின்னர் (கிபி 690), கிபி 710 இல், உமயாட்டுகளால் மரத்தாலான முதலாவது அல் அக்ஸா பள்ளிவாசல் கட்டப்பட்டது. இது குறைந்தது 5 தடவையாவது மீளக்கட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால், ஒரு தடவையாவது, முற்றாக அழிந்துள்ளது. கடைசியாக, பெரிய மீளமைப்பு 1035 ஆம் ஆண்டு நடைபெற்றது. அல் அக்சா பள்ளிவாசலே யெருசலேமிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசலாகும். 5000 பேர்வரை உள்ளேயும், வெளியிலுமிருந்து தொழக்கூடிய வசதிகள் உண்டு. இக்கட்டிடத்தில், சிலுவைபடையினர்களின் (Crusader) பாணியுட்பட பல பாணிகளின் கலவை காணப்படுகிறது. சிலுவைபடையினர் யெருசலேமைக் கைப்பற்றி வைத்திருந்தபோது, இந்த பள்ளிவாசல் ஓர் அரண்மனையாகப் பயன்படுத்தினார்கள். முற்காலத்தில் யூத ஆலயம் இருந்த இடத்தில் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையில், அப்பொழுது இது சொலமனின் ஆலயம் என அழைக்கப்பட்டது.

எருசலேம்: அருகிலுள்ள இடங்கள்

மேற்குச் சுவர்

140 m தொலைவில்

எருசலேம் கோவில்

190 m தொலைவில்

Western Wall Plaza

210 m தொலைவில்

பாறைக் குவிமாடம்

210 m தொலைவில்

இரண்டாம் கோவில்

230 m தொலைவில்

கோயில் நிறுவனம்

270 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.