Landmark Wiki

← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மலேசிய விலங்கியல் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மலேசிய விலங்கியல் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மலேசிய விலங்கியல் பூங்கா என்றால் என்ன?

மலேசிய விலங்கியல் பூங்கா (மலாய்: Zoo Negara; ஆங்கிலம்: National Zoo) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் மாவட்டம் உலு கிளாங்கில் 110 ஏக்கர் (45 எக்டர்) நிலப்பரப்பில் அமைந்துள்ள ஓர் உயிரியல் பூங்கா ஆகும்.

மலேசிய விலங்கியல் பூங்கா எங்கே உள்ளது?

கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.2097, 101.7578.

இதன் கதை

மலேசிய விலங்கியல் பூங்கா (மலாய்: Zoo Negara; ஆங்கிலம்: National Zoo) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் மாவட்டம் உலு கிளாங்கில் 110 ஏக்கர் (45 எக்டர்) நிலப்பரப்பில் அமைந்துள்ள ஓர் உயிரியல் பூங்கா ஆகும். இதனை 14 நவம்பர் 1963-இல் மலேசியாவின் முதல் மலேசியப் பிரதமர், துங்கு அப்துல் ரகுமான் திறந்து வைத்தார். இந்தப் பூங்காவை மலேசிய விலங்கியல் கழகம் (Malaysian Zoological Society) எனும் அரசு சாரா அமைப்பு நிர்வகித்து வருகிறது. இப்பூங்காவிற்குத் தேவையான நிதி பார்வையாளர் கட்டணம், கொடையாளர்கள், மற்றும் விளம்பரதாரர்களின் மூலமாகக் கிடைக்கப் பெறுகிறது. இங்கு 459 வகையான இன வகைகளைச் சேர்ந்த 5137 விலங்குகள் உள்ளன. 90 விழுக்காட்டு விலங்குகள் அவற்றின் வாழுமிடச் சூழலுக்கு ஏற்ப பாதுகாக்கப் படுகின்றன. சூலை 2007-இல், MS ISO 9001:2008 தரச் சான்றிதழை பெற்றது. மேலும் தென்கிழக்கு ஆசிய உயிரியல் பூங்காக்கள் சங்கத்தின் (South East Asian Zoos Association) உறுப்பினராகவும் உள்ளது.

கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Al Akram Mosque

5.7 km தொலைவில்

As Syakirin Mosque

7.4 km தொலைவில்

Four Seasons Place Kuala Lumpur

7.6 km தொலைவில்

கேஎல்சிசி பூங்கா

7.7 km தொலைவில்

பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம்

7.7 km தொலைவில்

பெற்றோனாசு கோபுரங்கள்

7.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.