Landmark Wiki

← கோலாலம்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பெற்றோனாசு கோபுரங்கள்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பெற்றோனாசு கோபுரங்கள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பெற்றோனாசு கோபுரங்கள் என்றால் என்ன?

பெட்ரோனாஸ் கோபுரங்கள் அல்லது பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் (ஆங்கிலம்: Petronas Towers; மலாய்: Menara Petronas; சீனம்: 大马国油双峰塔) என்பது மலேசியா, கோலாலம்பூரில் அமையப் பெற்றுள்ள உலகிலேயே ஐந்தாவது மிக உயரமான கட்டிடங்களாகும்.

பெற்றோனாசு கோபுரங்கள் எங்கே உள்ளது?

கோலாலம்பூர்; ஆயத்தொலைவு 3.1578, 101.7117.

இதன் கதை

பெட்ரோனாஸ் கோபுரங்கள் அல்லது பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் (ஆங்கிலம்: Petronas Towers; மலாய்: Menara Petronas; சீனம்: 大马国油双峰塔) என்பது மலேசியா, கோலாலம்பூரில் அமையப் பெற்றுள்ள உலகிலேயே ஐந்தாவது மிக உயரமான கட்டிடங்களாகும். 20-ஆம் நூற்றாண்டின் மிக உயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இந்தக் கட்டிடம் ஆகும். 2003 அக்டோபர் 17-ஆம் தேதி தாய்ப்பே 101 வானளாவிக் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, பெட்ரோனாஸ் கோபுரங்கள்தான் உலகின் உயரமான கட்டிடங்களாக இருந்து வந்தன. எனினும், உலகின் மிக உயரமான இரட்டைக் கோபுரங்களாக இன்னமும் இருந்து வருகின்றன. கோலாலம்பூர் மாநகரின் அடையாளச் சின்னமாகவும் இருந்து வருகிறது. சீசர் பெலி என்னும் கட்டிடக் கலைஞரால் 1998-ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் முழுவதும், அலுவலகப் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் துருப் பிடிக்காத உருக்குகளையும், கண்ணாடிகளையும் பயன்படுத்தி இந்த 88 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடிகள் உயரத்தில் கட்டிட உச்சியைக் கொண்டு இருந்தாலும், அதன் உச்சியில் அமைந்துள்ள கூரிய அமைப்புகள் 1483 அடி உயரத்தைத் தொடுகின்றன. மலேசியாவின் முஸ்லிம் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும், இஸ்லாமியக் கலையில் காணப்படும் வடிவ அமைப்பைக் கொண்டதாகவும் இந்தக் கட்டிடம் அமைந்து உள்ளது.

கோலாலம்பூர்: அருகிலுள்ள இடங்கள்

பெட்ரோனாஸ் குழுவிசை அரங்கம்

50 m தொலைவில்

Four Seasons Place Kuala Lumpur

230 m தொலைவில்

கேஎல்சிசி பூங்கா

440 m தொலைவில்

கோலாலம்பூர் மாநாட்டு மையம்

470 m தொலைவில்

As Syakirin Mosque

490 m தொலைவில்

கேஎல்சிசி நீர்வாழ் உயிரினக் காட்சியகம்

510 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.