Landmark Wiki

← மகலாங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஙவென் கோயில், மத்திய சாவகம்

பிற மொழிகள்: English · Bahasa Indonesia

ஙவென் கோயில், மத்திய சாவகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஙவென் கோயில், மத்திய சாவகம் என்றால் என்ன?

நாகவன் கோயில் (Ngawen) (Candi Ngawen போன்ற உள்நாட்டில் அறியப்பட்ட) ஒரு 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது புத்த கோயிலாகும்.

ஙவென் கோயில், மத்திய சாவகம் எங்கே உள்ளது?

மகலாங்; ஆயத்தொலைவு -7.6042, 110.2725.

இதன் கதை

நாகவன் கோயில் (Ngawen) (Candi Ngawen போன்ற உள்நாட்டில் அறியப்பட்ட) ஒரு 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது புத்த கோயிலாகும். இக்கோயில் இந்தோனேஷியாவில் மத்திய ஜாவாவில் மகேலாங் ரீஜன்சியில் முண்டிலன் துணை மாவட்டமான நாகவன் கிராமத்தில் அமைந்துள்ளது. 6 km (3.7 mi) மெண்டுட் கோயிலின் கிழக்கே 6 கி.மீ. (அல்லது 3.7 மைல்) தொலைவிலும், முண்டிலன் நகர மையத்தின் தெற்கே 5 கி.மீ. (அல்லது 3.1 மைல்) தொலைவிலும் அமைந்துள்ள, ஐந்து கோயில்களைக் கொண்ட வளாகமாகும். இருந்தாலும் அவற்றில் ஒன்று மட்டுமே வெற்றிகரமாக புனரமைக்கப்பட்டுள்ளது. நாகவன் கோயில், அருகிலுள்ள போரோபுதூர், பாவோன் மற்றும் மெண்டட் ஆகிய மூன்று புத்தர் கோயில்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த கோயில்கள் சைலேந்திர வம்சத்தின் போது (8 – 9 ஆம் நூற்றாண்டுகள்) கட்டப்பட்டவை ஆகும். இந்த நான்கு கோயில்களும் இணைந்து ஒரு நேர் கோட்டில் அமைந்துள்ளன. மேற்கிலிருந்து கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ள இவை, சற்று ஓரமாக வடகிழக்கு திசையை நோக்கிய நிலையில் உள்ளன. அதன் கிழக்குப் பகுதி எல்லையின் முடிவானது மெராபி மலையின் உச்சியை நோக்கிய வகையில் காணப்படுகிறது. இந்த கோயில் செதுக்கல் அமைப்பு போன்றவை போரோபுதூரை விட பழமையான கோயில் என்பதை வெளிப்படுத்துகின்றன. இக்கோயில் ஒவ்வொரு மூலையிலும் காணப்படுகின்ற சிங்கங்களுக்காக சிறப்பு பெற்றவையாகும்.

மகலாங்: அருகிலுள்ள இடங்கள்

உக்கிர் கோவில்

4.3 km தொலைவில்

மெண்டுத்துக் கோயில், மத்திய சாவகம்

4.7 km தொலைவில்

பாவோன் கோயில், மத்திய சாவகம்

5.8 km தொலைவில்

கர்மவிபங்கா அருங்காட்சியகம், போரோபுதூர்

7.5 km தொலைவில்

போரோபுதூர்

7.6 km தொலைவில்

சமுத்ர ரக்சா அருங்காட்சியகம், போரோபுதூர்

7.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.