← அல்-உக்சுர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ராமேசியம்
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
ராமேசியம் என்றால் என்ன?
ராமேசியம் என்பது புது எகிப்து இராச்சியத்தின் 19-ஆம் வம்சத்தின் மூன்றாம் பாரோ இரண்டாம் ராமேசசின் நினைவுக் கோயில் ஆகும்.
ராமேசியம் எங்கே உள்ளது?
அல்-உக்சுர்; ஆயத்தொலைவு 25.7278, 32.6106.
இதன் கதை
ராமேசியம் என்பது புது எகிப்து இராச்சியத்தின் 19-ஆம் வம்சத்தின் மூன்றாம் பாரோ இரண்டாம் ராமேசசின் நினைவுக் கோயில் ஆகும். இது தெற்கு எகிப்தில் உள்ள தேபன் நகரத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் நவீன லக்சோர் நகரத்துக்கு எதிரே நைல் ஆற்றின் மறுகரையில் மன்னர்களின் சமவெளியில் அமைந்துள்ளது. ராமேசியம் என்னும் பெயர் பிரெஞ்சு மொழிப் பெயரான "Rhamesséion" என்பதில் இருந்து பெறப்பட்டது. இப் பிரெஞ்சு மொழிப் பெயரை முதலில் உருவாக்கிப் பயன்படுத்தியவர் சோன் பிரான்சுவா சம்போலியன் (Jean-François Champollion) என்பவர். இவர் 1829 ஆம் ஆண்டில் இப்பகுதிக்குச் சென்றபோது இக்கோயிலின் அழிபாடுகளில் ராமேசசின் பெயரையும் பட்டங்களையும் குறிக்கும் பட எழுத்துக்களைக் கண்டு பிடித்தார். இரண்டாம் ராமேசஸ் பல கட்டிடங்களைத் திருத்தியதுடன் புதிய பல கட்டிடங்களையும் அமைப்பித்தான். இறப்பின் பின்னரும் தனது நினைவு நிலைத்திருக்கும் படியாக அவன் அமைத்த இக் கோயிலே அவற்றுள் சிறப்பானது. இது, புவியில் வாழும் தெய்வங்களாகக் கருதப்பட்ட பாரோக்களை வணங்குவதற்காக புது எகிப்து இராச்சியத்தின் அரச அடக்க நடைமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டது. இதுவரை கிடைத்துள்ள சான்றுகளின்படி, இரண்டாம் ராமேசசின் ஆட்சி தொடங்கிய சிறிது காலத்தின் பின் தொடங்கிய இதன் கட்டிட வேலைகள் 20 ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவேறியதாகத் தெரிகிறது.
அல்-உக்சுர்: அருகிலுள்ள இடங்கள்
மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள்
800 m தொலைவில்
தேர் அல்-மதினா
920 m தொலைவில்
தேர் எல் பகாரி
1.1 km தொலைவில்
Theban Necropolis
1.2 km தொலைவில்
Mortuary temple of Hatshepsut
1.2 km தொலைவில்
மெடிநெத் அபு
1.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.