← கேமரன் மலை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தெம்புரோங் குகை
மலேசியாவில் உள்ள குகை
பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
தெம்புரோங் குகை என்றால் என்ன?
தெம்புரோங் குகை (மலாய்: Gua Tempurung; ஆங்கிலம்: Tempurung Cave); என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், கோப்பேங் நகருக்கு அருகில் உள்ள ஒரு குகை ஆகும்.
தெம்புரோங் குகை எங்கே உள்ளது?
கேமரன் மலை; ஆயத்தொலைவு 4.4167, 101.1833.
இதன் கதை
தெம்புரோங் குகை (மலாய்: Gua Tempurung; ஆங்கிலம்: Tempurung Cave); என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், கோப்பேங் நகருக்கு அருகில் உள்ள ஒரு குகை ஆகும். இந்தக் குகையானது குகை ஆர்வலர் மத்தியில் பிரபலமாக உள்ளது. ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் நீண்ட இந்தக் குகை மலேசியாவின் மிக நீண்ட குகைகளில் ஒன்றாகும். தவிர தீபகற்ப மலேசியாவில் மிக நீண்ட குகையாகவும் கருதப் படுகிறது. தெம்புரோங் குகை 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான குகையாகும். இந்தக் குகையில் சுண்ணாம்பு, ஈயம், பளிங்கு கற்கள், தாது பொருள்கள் புதைந்து உள்ளன. கடந்த நூற்றாண்டில் பல்வேறு காலக் கட்டங்களில் இந்தக் குகையில் சில சிறிய அளவிலான ஈய சுரங்கங்கள் இருந்துள்ளன.
கேமரன் மலை: அருகிலுள்ள இடங்கள்
கோப்பேங் மகா முத்து மாரியம்மன் கோவில்
5.8 km தொலைவில்
Gopeng Baru Jamek Mosque
6.2 km தொலைவில்
All Souls' Church
23.1 km தொலைவில்
ஈராவ் மலை
23.8 km தொலைவில்
பிரிஞ்சாங் மலை
24.7 km தொலைவில்
Time Tunnel (museum)
24.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.