Landmark Wiki

← அம்பி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

துங்கபத்ரா அணை

கர்நாடகத்தில் உள்ள அணை

பிற மொழிகள்: English

துங்கபத்ரா அணை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

துங்கபத்ரா அணை என்றால் என்ன?

துங்கபத்ரா அணை அல்லது பம்பா சாகர் (ஆங்கிலம்: Tungabhadra Dam) என்பது கிருஷ்ணா ஆற்றின் துணை ஆறான துங்கபத்ரா ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தின் ஹொஸபேட்டே பகுதியிலுள்ள அணையாகும்.

துங்கபத்ரா அணை எங்கே உள்ளது?

அம்பி; ஆயத்தொலைவு 15.3000, 76.3333.

இதன் கதை

துங்கபத்ரா அணை அல்லது பம்பா சாகர் (ஆங்கிலம்: Tungabhadra Dam) என்பது கிருஷ்ணா ஆற்றின் துணை ஆறான துங்கபத்ரா ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தின் ஹொஸபேட்டே பகுதியிலுள்ள அணையாகும். வேளாண்மை, மின்சாரம், வெள்ளநீர் மேலாண்மை என இந்த அணை பல்நோக்கு பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் ஹைதராபாத் மாகாணமும், சென்னை மாகாணமும் இணைந்து அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் கருநாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் சேர்ந்து 1953 ஆம் ஆண்டு கட்டிமுடித்தனர். ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிடையே அணை நீர் பங்கீட்டில் பிணக்கு நிலவுகிறது. ஹைதராபாத் மாகாணத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் இதன் தலைமைப் பொறியாளர் ஆவார். மண்ணும் சுண்ணாம்பும் சேர்ந்து கட்டப்பட்டதால் இதன் நிலைத்தன்மையும், நீடித்து நிற்கும் தன்மையும் கொண்டுள்ளது. இதைப் போல எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நிலைத்து நிற்கும் சிமெண்ட் அல்லாத அணை இதுவெனக் கருதப்படுகிறது. மாபெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டு இதைக் கட்டிமுடித்தனர், அதன் பிரதான ஒப்பந்ததாரராக ஹைதராபாத் மாகாண மகபூப்நகரின் கொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட் ரெட்டி முலமால்லா செயல்பட்டார்.

அம்பி: அருகிலுள்ள இடங்கள்

அனந்தசயனர் கோயில்

8.3 km தொலைவில்

விருபாட்சர் கோயில்

14.0 km தொலைவில்

விஜயநகரம்

14.1 km தொலைவில்

அம்பி

14.3 km தொலைவில்

மாதங்கா மலை

14.4 km தொலைவில்

தாமரை அரண்மனை

15.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.